மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் மே மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படுகிறது.
பிளஸ்–2 தேர்வு முடிவு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வை எழுதி முடிவுக்காக காத்திருக்கிறார்கள். கடந்த வருடம் போலவே இந்த வருடமும் மே மாதம் 9–ந்தேதி பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று அதிகார பூர்வமாக அரசு தேர்வுத்துறை அறிவித்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த வருடம் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் மே மாதம் 4–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை வழங்கப்பட்டது. மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் மே மாதம் 9–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை வழங்கப்பட்டது.
மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையை ஜூலை 31–ந்தேதிக்குள் முடிக்க அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
மே முதல் வாரத்தில் வினியோகம்
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் மே மாதம் முதல் வாரத்தில் கொடுக்கப்பட உள்ளதாக மருத்துவக்கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன.
இந்த மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 555 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் 383 இடங்கள் ஆகும். இந்த இடங்கள் போக மீதம் உள்ள 2 ஆயிரத்து 172 இடங்கள் தமிழகத்திற்கு கிடைக்கும்.
பல் மருத்துவ படிப்பில் சேர சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி மட்டும்தான். இந்த கல்லூரியில் பி.டி.எஸ். படிப்பில் சேர 100 இடங்கள் மட்டுமே உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கீடு 15 இடங்கள். இந்த இடங்கள் தவிர 85 இடங்கள் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் தமிழக மாணவர்கள் சேரலாம். அதுவும் கடந்த வருடம் சென்னை மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்பட்டன.
கலந்தாய்வு
மருத்துவ கவுன்சிலிங் முடிந்ததும் என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கும். மருத்துவ படிப்பில் சேருவதற்கு கடந்த வருடம் விண்ணப்பங்கள் குறைவாக வந்திருந்தன. அதாவது 2012–ம் ஆண்டை விட 700 விண்ணப்பங்கள் குறைவாக இருந்தன.

No comments:
Post a Comment