திருப்பூர் கோட்டத்தில் காலியாக உள்ள, கிளை தபால் அலுவலர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
தபால் துறை கோட்ட கண்காணிப்பாளர் சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கை: பிச்சக்கல்பட்டி (மூலனூர்), கோனேரிபட்டி (கொளிஞ்சிவாடி), சிம்தகள்ளி (தாளவாடி), முதியாநெரிச்சல் (காங்கயம்), பரளிபவர் ஹவுஸ் (காரமடை) உள்ளிட்ட பகுதிகளில் கிளை தபால் அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. இதற்கான விண்ணப்பம் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் கிடைக்கும்.18 முதல் 65 வயதுக்கு உட்பட்டவராக, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர், பத்தாம் வகுப்பில் தமிழை முதன்மை பாடமாக படித்திருக்க வேண்டும்.
அம்மதிப்பெண் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். கட்டாயம் கம்ப்யூட்டர் தொடர்பான அறிவு பெற்றவராக விண்ணப்பிப்பவர்இருக்க வேண்டும்.ஏதேனும் ஒரு கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தில், 60 நாட்கள் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வேறு ஏதேனும் ஒரு தொழிலில் வருமானம் ஈட்டுபவராக இருத்தல் வேண்டும்.விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படும் பட்சத்தில், கிளை அஞ்சலகம் அமைந்திருக்கும் ஊரில் கிளை அஞ்சலகம் செயல்பட தேவையான கட்டடத்தை தங்கள் சொந்த செலவில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வூரில் நிரந்தரமாக தங்கி பணிபுரிய வேண்டும். கிளை அஞ்சலக அலுவலருக்கென ஒதுக்கப்பட்ட பணி மட்டுமின்றி, தபால் பட்டுவாடா, கடிதபையை எடுத்துச் செல்லும் பணியும் மேற்கொள்ள வேண்டும்.
இப்பணி முற்றிலும் தற்காலிகமானது; முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்ய தபால் துறைக்கு முழு உரிமைஉண்டு.விண்ணப்பிப்பதற்கான தகுதி நிபந்தனை, இணைக்க வேண்டிய சான்று மற்றும் விண்ணப்பத்தை அனுப்புவதற்கான முறை போன்ற விவரங்கள் விண்ணப்பத்தின் பின்புறம் இடம் பெற்றுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை "சிதம்பரம், திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பூர் கோட்டம், திருப்பூர் 641601" என்ற முகவரிக்கு ரெஜிஸ்டர் போஸ்ட் மற்றும் ஸ்பீடு போஸ்ட் அனுப்ப வேண்டும்.விண்ணப்பம் மீது பதவியின் பெயர், விண்ணப்பிக்கும் ஊரின் பெயர் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். சாதாரண தபால், கூரியர் மூலம் அனுப்பும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். பிச்சக்கல்பட்டி, கோனேரிபட்டி பகுதிகளுக்கு விண்ணப்பிக்க, இம்மாதம் 29ம் தேதி கடைசி நாள். பிற பகுதிகளுக்கு, அடுத்த மாதம் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment