தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ். படிப்பிற்கான மாணவர்
சேர்க்கைக்காக, மே இரண்டாவது வாரத்தில், விண்ணப்பம் வினியோகிக்கப்படலாம்'
என, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள்
தெரிவித்தனர். தமிழகத்தில், 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீதம் போக, மாநில ஒதுக்கீட்டில், 2,172 இடங்கள் உள்ளன.
இவை, இடஒதுக்கீடு அடிப்படையில், கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதுதவிர, தமிழகத்தில் உள்ள, 13 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பிக்கும், 950 அரசு ஒதுக்கீடு, எம்.பி.பி.எஸ்., இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, ஒரே விண்ணப்பம் தான் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 9ல் வெளியாக உள்ளது. இதையொட்டி, இந்த கல்வி ஆண்டுக்கான விண்ணப்ப வினியோகம், மே இரண்டாவது வாரத்தில் துவங்கும் என, தெரிகிறது. "விண்ணப்பக் கட்டணம், வினியோக தேதி உள்ளிட்ட முழு விவரங்கள், விரைவில் வெளியிடப்படும்' என, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment