பி.எஸ்.என்.எல்., தரைவழி, 'பிராட்பேண்ட்' சேவை கட்டணம், 50 ரூபாய்
உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பயன்பாட்டு அளவும்
அதிகரிக்கப்பட்டுள்ளது. இக்கட்டண உயர்வு, மே 1 முதல், அமலாகிறது.
பொதுத்துறை தொலை தொடர்பு நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., வெளியிட்டுள்ள
அறிக்கை: நகரங்களில் வீடுகளுக்கு வழங்கப்படும், தரைவழி பிராட்பேண்ட்
கட்டணம், 950 ரூபாயில் இருந்து, 999 ரூபாயாகவும், கிராமப்புறங்களில், 500
ரூபாயில் இருந்து, 550 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில்
இதன் பயன்பாட்டு அளவு, 6 ஜி.பி., வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment