scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

April 03, 2014

என்ஜினீயரிங் படிப்பு விண்ணப்பம் மே முதல் வாரத்தில் வினியோகம் கவுன்சிலிங் ஜூன் 3-வது வாரத்தில் தொடங்குகிறது

   என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் மே மாதம் முதல் வாரத்தில் வினியோகிக்கப்படும் என்றும் ஜூன் 3-வது வாரத்தில் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தெரிவித்தார். மே முதல் வாரத்தில் என்ஜினீயரிங் விண்ணப்பம் பிளஸ்-2 தேர்வு கடந்த 25-ந்தேதி முடிவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் 66 மையங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் பிளஸ்-2 தேர்வு முடிவு மே மாதம் 9-ந்தேதி வெளியிடப்பட்டது.

அதுபோல இந்த வருடமும் மே மாதம் 9-ந்தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் எப்போது விற்கப்படும் என்று கேட்டதற்கு அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் அளித்த பதில் வருமாறு:- கடந்த வருடம் போல இந்த வருடமும் மே மாதம் முதல் வாரத்தில் என்ஜினீயரிங் விண்ணப்பம் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 59 இடங்களில் வழங்கப்படும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதில் இணையதளத்தில் அரசு தேர்வுத்துறை வெளியிடும் பிளஸ்-2 மதிப்பெண்ணை ஜெராக்ஸ் எடுத்து அனுப்ப வேண்டும். கலந்தாய்வு தொடக்கம் பின்னர் விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
கலந்தாய்வு ஜூன் மாதம் 3-வது வாரத்தில் தொடங்கும். பொது கலந்தாய்வு எப்படியும் ஒரு மாதத்திற்கு அதிகமாக நடைபெறும். ஜூலை 31-ந்தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க உள்ளோம். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் பி.இ. முதலாம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் தொடங்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment