வரும் மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள், தங்களது வாக்காளர் அடையாள அட்டை
தவிர12 இதர ஆவணங்களில் ஒன்றியை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல்
ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர்கள், தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் ஸ்லிப்
பயன்படுத்திவாக்களிக்க முடியும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து,
வாக்காளர் அடையாள அட்டை பெறாதவர்கள் கீழ்கண்ட 12 ஆவணங்களை அடையாள
அட்டையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.அதாவது,
1. பாஸ்போர்ட்
2. டிரைவிங் லைசென்ஸ்
3. மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அடையாள அட்டை
4. போட்டோவுடன் கூடிய வங்கி பாஸ் புத்தகம்
5. பான் கார்டு
6. ஆதார் அட்டை
7. போட்டோவுடன் கூடிய ஸ்மார்ட் கார்ட்
8. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட அட்டை
9. போட்டோவுடன் கூடிய மருத்துவ காப்பீடு அட்டை
10. ஓய்வூதிய புத்தகம்
11. பூத் சிலிப்
12. புகைப்பட வாக்காளர்அடையாள அட்டை.
மேற்கண்ட 12 ஆவணங்களை காட்டி வாக்குபதிவன்று வாக்காளர்கள் ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment