scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

April 19, 2014

புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம்

புதிதாக சேர்க்கப்பட்ட 27 ஆயிரம் வாக்காளர்கள், 11 ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், கோபி, பெருந்துறை, பவானிசாகர் என மொத்தம் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 17 லட்சத்து 12 ஆயிரத்து 889 வாக்காளர்கள் இருந்தனர்.
இந்நிலையில், வாக்காகாளர் பட்டியலில் விடுபட்டவர்கள் மற்றும் புதியதாக பெயர் சேர்க்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதற்காக சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம்கள் மாவட்டம் முழுவதும் 1,953 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டதில் பல்வேறு காரணங்களுக்காக 3 ஆயிரம் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 27 ஆயிரத்து 59 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 3,246 பேரும், மேற்கு தொகுதியில் 6,913, மொடக்குறிச்சி தொகுதியில் 3,174, பெருந்துறை தொகுதியில் 3,055, பவானி தொகுதியில் 2,902, அந்தியூர் தொகுதியில் 2,479, கோபி தொகுதியில் 2,780, பவானிசாகர் தொகுதியில் 2,510 பேர் என 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 39 ஆயிரத்து 520-ஆக உயர்ந்தது.
8 தொகுதிகளில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும், அதேபோல பூத் சிலிப் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அடையாள அட்டை தேர்தலுக்கு பிறகுதான் வழங்கப்படும் என்றும், பூத் சிலிப் வழங்குவதற்கான கால அவகாசம் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, புதியதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், அரசுப் பணியாளர் அடையாள அட்டை, வங்கி, தபால் நிலைய பாஸ்புக், ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட 11 வகையான அடையாள அட்டைகளை காண்பித்து வாக்களிக்கலாம் எனவும், ரேஷன் கார்டு எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment