"ஏப்ரல், 1ம் தேதி முதல் ஓய்வூதியர்களின் நேர்காணல் போது மாதிரி கையொப்பம், கைரேகை கணினியில் பதிவு செய்யப்படுகிறது,'' என, மாவட்ட கருவூல அலுவலர் பத்மா தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஏப்ரல், 1ம்தேதி முதல் நடைபெறும் ஓய்வூதியர்களுக்கான நேர் காணலின் போது, மாதிரி கையொப்பம், கைரேகை மற்றும் புகைப்படம் ஆகியவை கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட உள்ளன.
இதனால், காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், ஓய்வூதியர்கள் அலுவலக வேலை நாட்களில் மட்டும் நேர்காணலுக்கு, பான் கார்டு ஜெராக்ஸ் கொண்டு வர வேண்டும்.ஓய்வூதியர்கள் நேர்காணலுக்கு வரவேண்டிய தேதி அட்டவணை விபரம்:
* அனைத்து வங்கிகளில் பென்ஷன் பெறும், போலீஸ் ஒய்வூதியர்கள் ஏப்ரல், 1, 2ம்தேதி.
* ஆசிரியர் குடும்ப ஓய்வூதியர்கள் (அனைத்து வங்கிகள்): ஏப்ரல், 3, 4ம்தேதி.
* ஆசிரியர் ஓய்வூதியர்கள் (அனைத்து வங்கிகள்): ஏப்ரல், 7, 8 மற்றும் 9ம்தேதி.
* சிவில் ஓய்வூதியர்கள் ( ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா), ஏப்ரல், 10ம் தேதி முதல் மே, 9ம்தேதி வரை.
* சிவில் ஓய்வூதியர்கள் (இந்தியன் வங்கி), மே,12ம் தேதி முதல், 23ம் தேதி வரை.
* சிவில் ஓய்வூதியர்கள் (ஐ.ஓ.பி., வங்கி), மே, 19ம் தேதி முதல், 23ம் தேதி வரை.
* சிவில் ஓய்வூதியர்கள் ( கனரா வங்கி). மே, 26ம் தேதி முதல், 30ம்தேதி வரை.
* சிவில் ஓய்வூதியர் (சிண்டிகேட் வங்கி), ஜூன் 2ம் தேதி மற்றும் 3ம்தேதி.
* குடும்ப ஓய்வூதியர் (அனைத்து வங்கிகள்), ஜூன், 4ம் தேதி முதல், 30ம்தேதி வரை.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment