தற்போது தமிழ் வழிக் கல்வியில் மாணவர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதை ஆசிரியர்களாகிய நாம் அறிவோம். ஏதேனும் புதுமையான அணுகுமுறையை பின்பற்றித்தான் மாணவர்களை நம் பள்ளிகளில் சேர்க்க முடியும் என்ற நிலை தான் தற்போது உள்ளது. மாணவர்களின் கற்றலை தரமானதும், இனிமையாகவும் மாற்றவும், ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைக்கவும் ஒரு புது முயற்சியாக பாடங்களை வீடியோவாக மாற்ற முயற்சி செய்துள்ளோம். ஒரு வகுப்புக்கான குறுந்தகடு ரூபாய்30 மட்டுமே. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான குறுந்தகடு ரூபாய்150 மட்டுமே. ஆசிரிய நண்பர்கள் இந்த வீடியோக்களை தங்கள் வகுப்புகளில் பயன் படுத்துவதன் மூலம் தரமான கற்றல்-கற்பித்தல் நிகழும் என உறுதியாக நம்புகிறோம்.
இந்த குறுந்தகடுகள் கிடைக்கும் இடம்: குரு செராக்ஸ், மாநகராட்சி வணிக வளாகம், மத்திய பேருந்து நிலையம், திருச்சி-620 001. தொலைபேசி 94434 77376.
வெளியூர் ஆசிரியர்கள் குரியர் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இது பற்றி உங்கள் கருத்துகளை இந்த வீடியோவை தயாரித்த நண்பர் திரு.குருமூர்த்தி 97914 40155 அவர்களிடம் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment