இன்று SSTA சங்கத்தை சேர்ந்த மாநில
பொறுப்பாளர்கள் தொடக்கக் கல்வி இயக்குனரை தொலைபேசி வாயிலாக தொடர்பு
கொண்டு 2013-14ஆம் கல்வியாண்டுகான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும்
மாவட்ட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்தமாறு வலியுறுத்தப்பட்டது.
அப்பொழுது தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் கலந்தாய்வு நடத்துவதற்கான
அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன எனவும், அரசின் அனுமதிகாக
காத்திருப்பதாகவும், அனுமதி வந்த உடன் ஒரே நாளில் கலந்தாய்வு நடத்தி
முடிக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதுகுறித்து அரசு உடனடியாக உரிய ஆணை பிறப்பிக்க
வலியுறுத்தி நாளை சங்க மாநில பொறுப்பாளர்கள், உயர் அதிகாரிகளை சந்திக்க
உள்ளதாக சங்க மாநில பொறுப்பாளர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். மேலும்
அதற்குள் தேர்தல் அறிவிப்பு வராமல் இருப்பது நல்லது என்று மாநில பொதுச்
செயலாளர் திரு.இராபர்ட் தெரிவித்தார்.
No comments:
Post a Comment