சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித்
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தேர்வு முடிவுகளை www.cbse.nic.in,
www.ctet.nic.in ஆகிய இணைய தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த பிப்ரவரி
16-ஆம் தேதி நடத்தப்பட்டது. இத் தேர்வை நாடு முழுவதிலுமிருந்து 8.26
லட்சம் பேர் எழுதினர்.தேர்வில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில்
தேர்வர்களின் ஓ.எம்.ஆர். விடைத் தாள்கள் இணைய தளத்தில் பதிவேற்றம்
செய்யப்பட்டன. இதுபோல் தேர்வுக்கான சரியான விடைகளும் சி.பி.எஸ்.இ. இணைய
தளத்தில் வெளியிடப்பட்டன. இவற்றில் பிழை அல்லது ஆட்சேபணை இருந்தால்
அவற்றைத் திருத்திக் கொள்ள தேர்வர்களுக்கு வாய்ப்பும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தத் தேர்வுக்கான முடிவை
சி.பி.எஸ்.இ. இப்போது வெளியிட்டுள்ளது. மேலும், இறுதிசெய்யப்பட்ட விடைகளும்
இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment