scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

March 24, 2014

தொடக்கக் கல்வித் துறை பள்ளிகளுக்கும் ஏப்ரல் 18 முதல் கோடை விடுமுறை அறிவிக்க கோரிக்கை:

தமிழகத்தில் அதிகரிக்கும் கோடை வெய்யில்! மனம் மாறுமா கல்வித்துறை அலுவலர்களின் மனது??
தமிழகத்தில் அதிகரிக்கும் கோடை வெய்யில்!
மனம் மாறுமா கல்வித்துறை அலுவலர்களின் மனது??????????????
கண்டுகொள்ளாத தொடக்கக்கல்வித்துறை, பாராமுகத்தில்
தமிழக அரசு
வெயிலில் வாடும் 6-14 வயது பிள்ளைகள் தமிழக அரசு கட்டாய கல்வி சட்டத்தின்
எல்லா ஷரத்துகளையும் அமுல் படுத்தும் போது தொடக்க நடுநிலைப்பள்ளிகளின்
வேலை நாட்கள் 200 என்பதை அமுல் படுத்தாதது ஏன்? கல்வியாளர்கள் கேள்வி?

எல்லா அரசு தொடக்க/நடுநிலைப்பள்ளிகளிலும் மின்சார வசதி இல்லாததது
மட்டுமல்லாமல் இருக்கின்ற பள்ளிகளிலும் மின் விசிறி வசதி யின்மை.
மின்விசிறி உள்ள பள்ளிகள் சில இருந்தாலும் தற்போது பகலில் பலமணி நேர
மின்வெட்டு காரணமாக வெயிலின் கொடுமைத்தாக்கத்தில் மாணவர்கள்
உடனடி நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் எதிர்பார்ப்பு
இந்த ஆண்டு இதுவரை 23 சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்பட்டுள்ள நிலையில் இனிவரும் காலங்களிலும் எல்லா சனிக்கிழமைகளும்
வேலை நாட்கள்
சத்தமில்லாமல் தொடக்கக்கல்வியில் வாரத்திற்கு 6 நாள் வேலைதிட்டம்
அமுல்படுத்தப்பட்டதோ?
ஆசிரியர்சங்கங்களின் கவனம் பெறுமா
இந்த பிரச்சினை
உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் படிக்கும் 6 முதல்12 வரைவகுப்பு மாணவர்களுக்கு
வயதில் அதிகம் உள்ளவர்களுக்கு
மார்ச்-05க்கு மேல் 1/2 நாட்கள் பள்ளி,(தேர்வின் காரணமாக)
அதுமட்டுமல்ல
ஏப்ரல்15 க்கு மேல் கோடை விடுமுறை
ஆனால்
வயதில் குறைந்த
பச்சிளம்(6 முதல்-14வயது வரையிலான) பாலகர்களுக்கு
மட்டும்- ஏன்
கோடைக்காலமான,
ஏப்ரல் மாதம் முழுவதும்,
தினமும் 100 டிகிரிக்குமேல்
தகிக்கும் வெயிலில்
ஏப்ரல் 30 வரை பள்ளி
கண்டிப்பாக நடைபெற வேண்டும்
என்ற உத்திரவு....................
ஏணிந்த பாகுபாடு
தமிழகஅரசின் கவனம் இதில் ஈர்க்கப்படுமா?
இதில்
இனிவரும் நாள்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.
என்ற பயம் நம்மையும் அல்லவா வாட்டுகிறது
ஊதியம் மட்டும் வேண்டும், பதவி உயர்விற்கு இடம் வேண்டும் என பல சங்கங்கள் வழக்கு தொடுக்கும் போது
RTE-ப்படி
200 வேலைநாள் என்பதைஅமுல் படுத்த
வழக்கு தொடுக்காததேன்?????????????
சுய நலத்தில் மட்டுமே
ஆசிரியர் சங்கங்கள் அக்கரை
பொதுநலத்திற்கு(குழந்தைகள் நலத்திற்கு)
இல்லையோ?
கடந்த இரண்டு நாட்கள் கோடைவெப்பம் குறித்த செய்தியை இங்கு பகிர்கிறேன்
வெள்ளி(20.03.14) அன்ரைய செய்தி
பல இடங்களில் வெள்ளிக்கிழமை 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பல்வேறு தரப்பினரும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மார்ச் மாதத்திலேயே தமிழகத்தின் பல இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.
தருமபுரி, மதுரை, சேலம், திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. மார்ச் மாதத்திலேயே கடுமையான வெயில் கொளுத்தும் நிலையில், வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர் இனிவரும் நாள்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.
சனிக்கிழமை (21.03.14) அன்றைய செய்தி
சேலத்தில் 103 டிகிரி வெயில்
தமிழகத்தில் அதிகபட்சமாக சேலத்தில் 103 டிகிரி வெயில் சனிக்கிழமை பதிவானது.
தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாள்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் சனிக்கிழமையும் பல இடங்களில் அதிக வெயில் நிலவியது.
சேலம், தருமபுரி, கரூர் பரமத்தி,
மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.
அன்புடன்
சக்திமைந்தன்
திமலை

No comments:

Post a Comment