2013-14ம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பதவி உயர்வு கலந்தாய்வு நீதிமன்ற வழக்குகளால் தடைப்பட்டது. அண்மையில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பதவி உயர்வு மற்றும் பணி நியமனத்திற்கு இரட்டைப்பட்டம் செல்லாது என தீர்ப்பளித்து எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றது, ஆனால் தொடக்கக் கல்வி துறையில் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த வார இறுதியில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளதால் தற்பொழுது பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இயலாது எனவும் ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஒப்படைத்த 1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் திரும்ப பெற வாய்ப்பில்லை எனவும், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்த பணியிடங்கள் போக மீதம் உள்ள 253 பணியிடங்களுக்கு 2014 முன்னுரிமைப் படியலின்படி ஜுன் மாதம் கலந்தாய்வு நடத்த உள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் திரு. தியாகராஜன் அவர்களிடம் கேட்டபொழுது
பள்ளிக்கல்வித்துறையில் நடத்தியது போல் தொடக்கக் கல்வித்துறையிலும் பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், இதுகுறித்து உடனடியாக தொடக்கக் கல்வி இயக்குனரிடம் பேசி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், இறுதி முடிவு விரைவில் தெரியவரும் தெரிவித்தார்.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
March 01, 2014
தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு ஜுன் மாதம் 01.01.2014 முன்னுரிமைப் பட்டியலின்படி தான் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment