ஏழாவது ஊதியக்குழு வரும் வரை,
இடைநிலை ஆசிரியர்களுக்கோ அல்லது வேறு எவருக்குமோ, ஊதியத்தில் எந்தவிதமான
வாய்ப்பும் கிடையவே, கிடையாது என்கின்றனர். இன்று சென்னையில்,
மரியாதைக்குரிய பள்ளிக்கல்வித் -துறை செயலாளர், முதலமைச்சர் தனிப்பிரிவு
மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை நம்முடைய SSTA பொறுப்பாளர்கள் சந்தித்து, இடைநிலை ஆசிரியர்களின்
சம்பள முரண்பாட்டை தீர்க்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
மற்றும் நிதித்துறையில் முக்கிய
அலுவலர்களை சந்தித்தனர். சந்திப்பில் நடந்தவைகளின் தொகுப்பு. ஏழாவது
ஊதியக்குழு வரும் வரை,இடைநிலை ஆசிரியர்களுக்கோ,அல்லது வேறு
எவருக்குமோ,ஊதியத்தில் எந்தவிதமான வாய்ப்பும் கிடையவே,கிடையாது
என்கின்றனர். இத்தடைகளை தகர்க்க நீதிமன்றத்தை நாடி குறைந்த
பட்சம்,உயர்நீதிமன்ற பெஞ்ச் அல்லது உச்ச நீதிமன்றம் சென்றாவது தீர்ப்பு
பெறவேண்டும்.
அல்லது தமிழநாட்டில் உள்ள இடைநிலை
ஆசிரியர்களும் ஒரே குடையின் கீழ் வந்து ஒரே கோரிக்கையினை முன்வைத்து போராடி
வெற்றி பெற முடியும்.உண்மை நிலை இதுதான்.உரக்கச் சொல்வோம். ஒன்றிணைந்து
போராடுவோம் ! ஒரு குடையின் கீழ் அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைவோம் ! ஒரே
கோரிக்கைகாக போராடுவோம் ! இறுதி வெற்றி இடைநிலை ஆசிரியர் இனத்திற்கே !!!
.......இன்றும் என்றும் என்றென்றும் ஆசிரியர்களுக்கான SSTA
No comments:
Post a Comment