ஆசிரியர் தகுதி தேர்வு
(டி.இ.டி.,) விவகாரத்தில்,
உச்சக்கட்ட குழப்பம் நிலவுவதால், டி.ஆர்.பி., தவியாய்தவித்து
வருகிறது. தேர்வுப்
பட்டியல், கனவாகப்
போய்விடுமோ என, தேர்வர்கள் புலம்பி வருகின்றனர்.
டி.இ.டி.,
தேர்வில்,
ஆரம்பத்தில் இருந்தே, இடியாப்ப சிக்கல் நீடித்து
வருகிறது. 2012ல் நடந்த தேர்வுக்கு, கேள்வித்தாளை
கடினமாக்கியதுடன், தேர்வு நேரமாக,
ஒன்றரை மணி
நேரமே ஒதுக்கினர்.
இதன் விளைவு,
தேர்வெழுதிய, 7 லட்சம் பேரில், வெறும், 2,448 பேர்தான்
தேர்ச்சி பெற்றனர்.
இதனால், அதே ஆண்டு இறுதியில், மீண்டும்
துணைத் தேர்வு
நடத்தப்பட்டது. இதில், கேள்வித்தாளை, சற்று எளிதாக்கியது
உடன், தேர்வு
நேரத்தை, மூன்று
மணி நேரமாக
உயர்த்தினர். இதனால், 20 ஆயிரம் பேர், தேர்ச்சி
பெற்றனர்.
27 ஆயிரம் பேர் தேர்ச்சி
கடந்த ஆண்டு,
ஆகஸ்டில் நடந்த
தேர்வில், 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களுக்கு, சான்றிதழ் சரி
பார்ப்பு நடத்தி முடித்து,
இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட, ஆசிரியர்
தேர்வு வாரியம் தயாரானது.
இந்நிலையில்,
திடீரென, தேர்ச்சிக்கான
மதிப்பெண் அளவை,
இடஒதுக்கீடு பிரிவினருக்கு , 60 சதவீதத்தில்
இருந்து, 55 சதவீதமாக குறைத்தது,
கடந்த, 3ம்
தேதி, முதல்வர் அறிவித்தார். ‘இந்த சலுகை,
2013 தேர்வுக்கும் பொருந்தும்’என,முதல்வர் வெளியிட்ட
அறிவிப்பு, தற்போது, டி.ஆர்.பி.,யை, இக்கட்டான
நிலைக்கு தள்ளியுள்ளது.
இதனால், 55 சத வீத மதிப்பெண் எடுத்தவர்களின்
பட்டியைல தயாரித்து,
அவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தவேண்டும். இதில், 30 ஆயிரம்
முதல் 40 ஆயிரம்
பேர் வரை
தேர்ச்சி பெற்றுள்ள
தாக கூறப்படுகிறது.
ஆனால், இது
குறித்தவிவரத்தை தெரிவிக்க, டி.ஆர்.பி.,
விரும்பவில்லை. எனினும்,கூடுதல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு,
இப்போது, சான்றிதழ்
சரிபார்ப்பு நடத்த முடியாத சிக்கல் உள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு பணியில்,
மாவட்டகல்வி அலுவலர்கள், முதன்மை
கல்வி அலுவலர்கள் தான் ஈடுபடுகின்றனர்.
மும்முரமாக தற்போது,பிளஸ்2 செய்முறை
தேர்வு
துவங் கிவிட்டதால், அந்த
பணியில், கல்வி
அலுவலர்கள், மும்முரமாக உள்ளனர். இந்த மாத
இறுதியுடன் , செய்முறை தேர்வு முடிகிறது . அடுத்த
சில தினங்களில்,
மார்ச், 3ல்
இருந்து, பொதுதேர்வு
துவங்கி விடுகிறது.
இதனால், அந்த
தேர்வுப் பணி
களில், அதிகாரிகள்,
கவனம் செலுத்துவர்.
தேர்வு முடிந்ததும்,
விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கும்.
இப்படி, தொடர்ச்சியாக,
மாவட்ட கல்வி
அதிகாரிகளுக்கு, பணிகள் காத்திருக்கின்றன. இந்நிலையில், டி.இ.டி., தேர்வர்களுக்கு, சான்றிதழ்
சரிபார்ப்பு பணியை, எப்படி நடத்த முடியும்
என, கல்வித்
துறை வட்டாரம்,
கேள்வி எழுப்புகிறது.
இதற்கிடையே, ‘2012 தேர்வர்களுக்கும்,சலுகை அளிக்க வேண்டும்’ என,
சிலர், சென்னை,
உயர் நீதிமன்றத்திற்கு
சென்றுள்ளனர். ‘இதுவைர நடந்த, மூன்று தேர்வுகளில்,
ஒரு தேர்வுக்கு
மட்டும் சலுகை
அளிப்பது, எந்த
வைகயில் நியாயம்;
குறிப்பாக, முதலில் நடந்த
கடுமையான தேர்வை
சந்தித்த தேர்வர்களுக்கு,
சலுகை அளிக்க
மறுப்பது சரியல்ல’என, தேர்வர்கள்
குரல் எழுப்புகின்றனர்.
உச்சக்கட்ட குழப்பங்கள்
இந்த விவகாரத்தில், 2012ல் நடந்த இரு தேர்வுகளில்
பங்கேற்றவர்களுக்கு சாதகமாக, தீர்ப்பு
கிடைக்கும் என, தேர்வர்கள் நம்புகின்றனர். இதன்படி,
உத்தரவு வந்தால்,
தற்போதுள்ள இடியாப்ப சிக்கல், மேலும் சிக்கலாகும்.
இந்த உச்சக்கட்ட
குழப்பங்களால், அடுத்து என்ன செய்வது என,
புரியாமல், டி.ஆர்.பி., தவியாய்
தவித்து வருகிறது.
அதிக மதிப்பெண்
பெற்று,விரைவில்,
வேலை கிடைக்கும்
என, காத்திருக்கும்
தேர்வர்கள், அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் குழப்பங்களால்,
புலம்பி வருகின்றனர்.
No comments:
Post a Comment