இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.ரெங்கராஜன், நமது "TNKALVI"க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் வருகிற பிப்.25
மற்றும் பிப்.26ல் நடைபெற உள்ள போராட்டத்தில் மாநிலம் முழுவதும் தொடக்க /
நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 60ஆயிரம் ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளதாக
தெரிவித்தார். கோரிக்கைகள் சார்பாக பள்ளிக்கல்விச் செயலாளருடன் நடைபெற்ற
பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் இதையடுத்து
திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு மற்றும் சி.பி.எஸ் திட்டம் இரத்து உள்ளிட்ட 7அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைபெற உள்ளது என்றும், இதில் தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். இப்பேட்டியின் போது மாநில செயற்குழு உறுப்பினர் நீலகண்டன் மற்றும் திருச்சி மாவட்ட செயலாளர் ஜோசப் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment