scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

February 17, 2014

மத்திய இடைக்கால பட்ஜெட்- 2014-15 (முழு விவரங்கள்) தனிநபருக்கான வருமான வரியில் மாற்றமில்லை

திருக்குறளை மேற்கொள்காட்டி பட்ஜெட் பேச்சை நிறைவு செய்தார் ப.சி. அரிசிக்கான சேவை வரி நீக்கம் வருமான வரி விகிதங்களில் மாற்றம் இல்லை காங்கிரஸ் கூட்டணி அரசின் 10 ஆண்டுகால சராசரி வளர்ச்சி 6.2 சதவீதமாகும் பாஜக கூட்டணி அரசின் (1999-2004) வளர்ச்சி விகிதம் 5.9 சதவீதம் தான் மருத்துவ சேவைகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு கல்விக் கடன்களுக்கு வட்டிச் சலுகை வழங்கப்படும். 
*பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் 10% அதிகரித்து ரூ. 2.24 லட்சம் கோடியாக உயர்வு 

*மருத்துவ சேவைகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு 

*எஸ்யூவி வகை வாகனங்களுக்கு வரி 20% குறைப்பு 

*மொபைல் சாதனங்களுக்கான உற்பத்தி வரி குறைப்பு 

*வாகனத்துறையில் உற்பத்தி வரி 12%-ல் இருந்து 10% ஆக குறைப்பு 

*வீட்டு வசதிக்கு ரூ8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு 

*பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் 10% அதிகரித்து ரூ. 2.24 லட்சம் கோடியாக உயர்வு 

*நேரடி பண மானிய திட்டம் தற்காலிகமாகவே நிறுத்தி வைப்பு. இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு மீண்டும் அமலுக்கு வரும். 

*மேலும் 7 புதிய அணு உலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன 500 மெகாவாட் திறன் கொண்ட அதிவேக அணு உலை கல்பாக்கத்தில் நிறுவப்படும். 

*296 தொழில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் அனுமதி நடப்பாண்டில் இலக்கை விஞ்சி ரூ.7 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது வரும் நிதியாண்டில் ரூ.8 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க திட்டமிட்டுள்ளோம். 

*உணவு, எரிபொருள், உர மானியத்துக்கு ரூ2 லட்சத்து 46 ஆயிரம் கோடி ஒதுக்கீடு சென்னை- பெங்களூர், பெங்களூர்- மும்பை, அம்ரிஸ்தர்- கொல்கத்தா இடையே 3 புதிய தொழில் மையங்கள் உருவாக்கப்படும்.

*எங்கள் சாதனைகளுக்குக் காரணம் கடும் உழைப்பு தான். எனக்கு கடும் உழைப்பை போதித்தவர்கள் என் தாயாரும், ஹாவர்டும் நாங்கள் வளர்ச்சியைக் காட்டவில்லை என்பது பொய் பிரச்சாரம். 

*எங்களது 10 ஆண்டு கால சாதனையை வரலாறு தீர்மானிக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறுபான்மையினரில் 14 லட்சம் பேர்தான் வங்கி கணக்கு வைத்திருந்தனர். தற்போது 42 லட்சம் சிறுபான்மையினர் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர்.

*ரயில்வே துறைக்கு மத்திய பட்ஜெட்டில் இருந்து ரூ. 29,000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு.

*உணவு, எரிபொருள், உரங்களுக்கான மானியமாக ரூ. 2.46 லட்சம் கோடி ஒதுக்கீடு 

*57 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

*ஆயுத போலீஸ் படையை வலுப்படுத்த ரூ11,009 கோடி ஒதுக்கீடு.

*நாட்டில் 7 புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.

*10 ஆண்டுகளுக்கு முன் சுகாதாரத்துறைக்கு ரூ. 7,248 கோடி ஒதுக்கப்பட்டது 

*கடந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு ரூ. 36,400 கோடி ஒதுக்கினோம்.

*வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ1,200 கோடி ஒதுக்கப்படும்.

*ஆதார் அட்டை வழங்குவதை முழுமையாக செயல்படுத்துவோம்.

*பாதுகாப்பு துறைக்கு முந்தைய ஆண்டை விட கூடுதலாக 10% நிதி ஒதுக்கீடு 

*நாட்டில் 4 மிகப் பெரிய சூரிய மின்சக்தி ஆலைகள் தொடங்கப்படும். 

*செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தி்யாவும் இணைந்துள்ளது.

*ஆதார் அட்டையை வெற்றிகரமாக செயல்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

*பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துக்கு ரூ7 ஆயிரம் கோடி. 

*சுகாதாரத்துறைக்கு ரூ33,725 கோடி ஒதுக்கீடு உணவு தானிய உற்பத்தி இதுவரை இல்லாத சாதனையாக 26 கோடி டன்னை எட்டியுள்ளது. 

*சர்வதேச பொருளாதார மந்த நிலையிலும், ஏற்றுமதியில் சாதனை நாட்டின் ஏற்றுமதி 6.3 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. 

*சென்னை- பெங்களூரை இணைக்கும் சரக்கு போக்குவரத்துக்கான ஆய்வுப்பணி நடக்கிறது. 

*ஐமு அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 6.2%- ப.சி 

*சென்னை- பெங்களூர், பெங்களூர்- மும்பை, அமிர்தசரஸ்- கொல்கத்தா தொழில்பூங்காக்கள் அன்னிய நேர முதலீட்டை மேலும் தாரளமாக்கி அதிக முதலீடு ஈர்க்கப்படும்- ப.சி. 

*வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் உத்தர்காண்ட் மாநிலத்துக்கு கூடுதல் நிதி அடுத்த ஆண்டு நிர்பயா நிதிக்கு ரூ1000 கோடி ஒப்புதல். 

*2013-14ல் உணவுதானிய உற்பத்திக்கு 263 மில்லியன் இலக்கு- ப.சிதம்பரம் 

*10 ஆண்டுகளுக்கு முன்பு கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ10,145 கோடி 

*10 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது கல்விக்கான நிதி ஒதுக்கீடு ரூ79,251 கோடி 

*யூனியன் பிரதேசங்களுக்கான மத்திய அரசின் நிதி உதவி அதிகரிக்கப்படும்- ப.சிதம்பரம் 

*மாநில அரசுகளுக்கான மத்திய அரசின் நிதி உதவி 3.38 லட்சம் கோடியாக அதிகரிப்பு 

*50 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

*உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி 5.2% ஆக இருக்கும் 

*பண மதிப்பு நிலையானதாக இருக்கிறது.

*ஏற்றுமதி வளர்ச்சி அடைந்துள்ளது- ப.சி. ஐமு கூட்டணியின் 

*கடந்த 10 ஆண்டுகால சாதனையை வரலாறு தீர்மானிக்கும்: ப.சிதம்பரம் உணவுப் பணவீக்கம் கவலை தருகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வளர்ச்சி நல்ல நிலையில் உள்ளது. உற்பத்தித் துறையில் தேக்கம் தொடர்கிறது. உற்பத்தித் துறையில் முதலீடுகளும் குறைந்துள்ளது கவலை தருகிறது. 

*பணவீக்கம் 5 சதவீதம் குறைந்துள்ளது.

*உற்பத்தி துறையில் முதலீடு குறைந்துள்ளது கவலையளிக்கிறது- ப.சிதம்பரம் 

*நாட்டின் ஏற்றுமதி 326மில்லியன் டாலராக இருக்கும்- ப.சிதம்பரம் 

*7 புதிய விமான நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.

*நாட்டின் பணவீக்க விகிதம் 5.05%ஆக குறைந்துள்ளது- ப.சிதம்பரம் 

*8 தேசிய உற்பத்தி மண்டலங்களுக்கு அனுமதி- ப.சிதம்பரம் 

*நிதிப்பற்றாக்குறை 4.6% ஆக கட்டுப்பாட்டில் உள்ளது-ப.சிதம்பரம் 

*ஐமு ஆட்சியில் வேளாண்துறை வளர்ச்சி 4% ஆக அதிகரிப்பு.

*நடப்பாண்டில் வேளாண்துறை வளர்ச்சி 4.6% ஆக இருக்கும்.

No comments:

Post a Comment