இன்றைய நாளில் விலைவாசி உயர்வு என்பது சாமானியன் தலையில் இடி இறங்குவதற்கு
சமம். ஆனால் சில இடங்களில் விலைக்கு மேல் விலை வைத்து விற்கப்படும் பொருளை
விற்பவனும் வாங்குபவனும் நீயும் நானும் தான் (சாமானியர்களே). எந்த ஒரு
பொருளையும் உற்பத்தி செய்தவுடன் அதன் அதிகபட்சே விலை நிர்ணயம்
செய்யப்படும், ஆங்கிலத்தில் Maximum Retail Price (MRP) என்று கூறுவர்.
இந்த விலையிலேயே வரி உள்பட அனைத்தும் அடங்கும்.
ஆனால் இன்று நாட்டில் பல பேர் இந்த அதிகபட்ச விலைக்குமேல் ஒரு விலை வைத்து
பொருள்களை விற்கிறார்கள். இது சட்டப்படி குற்றமாகும். பொதுமக்களாகிய நாம்
இதுபோன்ற அநியாயத்தை கண்டால் புகார் தெரிவிக்கும் வசதி மத்திய மாநில
அரசின் வசம் உள்ளது. தாங்கள் தங்கள் புகார்களை கடிதம் மூலமாகவும் அல்லது
தொலைபேசி மூலமாகவும் தெரிவிக்கலாம்.
இதற்கான புகார் தொலைபேசி எண் : 044 - 24321438.
கடிதம் அனுப்பும் முகவரி:
Controller of Legal Metrology (Weights & Measures)
Government of Tamil Nadu,
DMS Compound,
Teynampet, Chennai – 600 006.
இதற்கான புகார் தொலைபேசி எண் : 044 - 24321438.
கடிதம் அனுப்பும் முகவரி:
Controller of Legal Metrology (Weights & Measures)
Government of Tamil Nadu,
DMS Compound,
Teynampet, Chennai – 600 006.
No comments:
Post a Comment