scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

January 08, 2014

பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்க கல்வித்துறை நடவடிக்கை.

"மாவட்டத்தில் உள்ள நூறு பள்ளிகளை தேர்வுசெய்து அப்பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.கடந்த 1998ம் ஆண்டு தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த துவக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை சுற்றுச்சூழல் மன்றங்களை அமைக்க அரசு உத்தரவிட்டது. இம்மன்றங்கள் மூலம், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி வினா, விளையாட்டு போட்டி, பேரணி, மரக்கன்றுகள் வழங்குதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தர்மபுரி மாவட்டத்தில் 250 பள்ளிகள் சுற்றுச்சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டது.

மற்ற மாவட்டங்களை காட்டிலும் தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மன்றங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே "நம் பள்ளி, நம் தோட்டம்" திட்டம் செயல்படுத்தப்பட்டு வனத்துறையின் உதவியுடன் பள்ளிகளுக்கு பல்வேறு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சுற்றுச்சூழல் மன்றங்கள் சார்பில் பள்ளிகளில் மூலிகை தோட்டங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட சுற்றுச்சூழல் மன்றங்களின் திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:தர்மபுரி மாவட்டத்தில் 250 பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் செயல்படுகிறது.

கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் 159 மன்றங்கள் அமைக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கும், மக்களுக்கும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.தமிழகத்திலேயே தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் செயல்படும் "நம் பள்ளி, நம் தோட்டம்" திட்டத்தின் கீழ் இதுவரை 36,600 செடிகளை பள்ளிகளுக்கு வழங்கி உள்ளோம். நடப்பாண்டில், வனத்துறை உதவியுடன் ஒரு லட்சம் மரக்கன்றுகளை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும், இம்மன்றங்கள் சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

விரைவில், மாவட்ட சுற்றுச்சூழல் மன்றங்கள் சார்பில் நூறு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அப்பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

No comments:

Post a Comment