சென்னை, அண்ணா
பல்கலைக்கழகம், என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில்
எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளாண் முதலிய
படிப்புகளில் சேர்வதற்கு ‘டான்செட்’ என்ற நுழைவுத்தேர்வை எழுதவேண்டும்.
இந்த தேர்வை அண்ணாபல்கலைக்கழகம் மார்ச் மாதம் 22–ந்தேதி நடத்துகிறது. அதில்
மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை
நடைபெறும்.
டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அண்ணாபல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள்www.annauniv.edu/tancet2014 என்ற
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதாவது தங்களின் பெயரை பதிவு செய்து
கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், செயலாளர்,
டான்செட், அண்ணாபல்கலைக்கழகம், சென்னை என்ற முகவரிக்கு டிமாண்ட் டிராப்ட்
எடுத்து, புகைப்படத்துடன் சான்றிதழ்களையும் இணைத்து பிப்ரவரி
20–ந்தேதிக்குள் அனுப்பவேண்டும்.
சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள
மேலாண்மைத்துறை மற்றும் கணினி அறிவியல் துறைகளில் எம்.பி.ஏ. மற்றும்
எம்.சி.ஏ. படிப்பில் சேரவும் இந்த டான்செட் தேர்வை எழுதவேண்டும்.
இந்த தகவலை சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment