ரூபாய் நோட்டுகளில் பேனா மற்றும் பென்சிலால் கிறுக்கப்பட்டிருந்தால் அவை
வாங்கப்பட மாட்டாது என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி
தெரிவித்துள்ளது.
ரூபாய் நோட்டுகளின் வெள்ளை பகுதியில் எண்ணோ அல்லது கையெழுத்து போன்ற
கிறுக்கலோ அல்லது வாசகமோ இடம்பெற்றிருந்தால் அது செல்லாது என்றும், 2014
ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு இந்த நோட்டுகள் வங்கிகளில் பெற்றுக் கொள்ளப்பட
மாட்டாது என்ற தகவல் பரவி வருகிறது.
இத்தகவல் வெறும் வதந்தி என்றும் இதனால் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை
என்றும் தெரிவித்துள்ளது. இத்தகைய ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும்
என்றும், மக்கள் வழக்கம்போல இவற்றை வாங்கலாம், கொடுக்கலாம் என்றும்
தெரிவித்துள்ளது.
பேனாவால் கிறுக்கப்பட்ட வாசகம் இடம்பெற்றுள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது
என்று எத்தகைய சுற்றறிக்கையையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை என்றும்
தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment