scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

January 07, 2014

இலாபத்திற்காகப் பள்ளி நடத்தும் இக்காலத்தில் தமிழுக்காகப் பள்ளி நடத்தும் பண்பாளர்

திருப்பூர் தாய்த்தமிழ்ப்பள்ளி வளாகம். காலை ஏழு மணி. மாணவர்களுக்கான தண்ணீர்த் தொட்டியில் நீர் நிரம்பியிருக்கிறதா என்பதை பார்த்துவிட்டு வந்து, பள்ளி வகுப்பறைகளை பெருக்க ஆரம்பிக்கிறார் அந்த பெண்மணி.
ஒட்டுமொத்த பள்ளியையும் சுத்தம் செய்து அவர் நிமிர்ந்த நேரம்… பள்ளி வாகனம் கிளம்புகிறது… மாணவர்களை அழைத்து வர. அந்தப் பெண்மணியும் செல்கிறார். சற்று நேரத்தில் மாணவர்கள் பேருந்து வந்து நிற்கிறது. மாணவர்கள் வரிசையாக இறங்க.. மிகவும் சிறியவர்களை கவனமாக வண்டியிலிருந்து இறக்கி விடுகிறார் அந்தப் பெண்மணி. இதே போல் இரண்டு முறை.

மதிய வேளை. உச்சி வெய்யில் முகத்தில் அறைய… தண்ணீர்க்குழாய் அருகே அமர்ந்து, சிறார்களின் சாப்பாட்டு டப்பாக்களை கழுவுகிறார். மறுபடி மாலை பேருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கிளம்ப இவரும் உடன் செல்கிறார்.
பிறகு வீட்டுக்குச் சென்று வீட்டு வேலைகளை முடித்து இரவு எட்டு மணிக்கு பள்ளிக்கு வருகிறார். ஆம்.. பள்ளியின் இரவுக்காவல் பணியும் செய்கிறார்.
இவர்… அந்தப் பள்ளியின் அறங்காவலர்!
திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளியின் அறங்காவலர் அவர்.
“என் பெயர் விசயலக்குமி. என் கணவர் தங்கராசு தாளாளர். நமது தாய்த்தமிழில் அனைத்து நிலைகளிலும் சமய சார்பற்ற கல்வி வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள். அதே நேரத்தில் ஆங்கிலத்திலும் எங்கள் பிள்ளைகளுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கிறோம்.
ஆனாலும் தாய்த்தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்துவதால் பள்ளிக்கு நிதிச்சிக்கல்கள் ஏராளம். அதனால் தாயம்மா (ஆயா) வேலைக்கு ஆள் நியமிக்காமல் நானே செய்கிறேன். இரவுக் காவலுக்கு நானும் என் கணவரும் வந்துவிடுவோம்!”
தரமான கல்வி கொடுத்தும், தாய்த்தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் நிதிச் சிக்கல்!
தாயம்மாவாகவும், இரவுக்காவலாளியாகவும் இருக்கும் தாய்த்தமிழ்ப் பள்ளி அறங்காவலர் விசயலக்குமி அவர்களையும் நெகிழ்வுடன் நினைப்போம்!

No comments:

Post a Comment