கடந்த நவ.5ல் தேர்வு முடிவு மற்றும் இறுதி கீ ஆன்சர் வெளியிடப்பட்டது. 6.6 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 27 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2 கீ ஆன்சரில் சைக்காலஜியில் சில வினாக்களுக்கு தவறான விடைகள் வெளியிடப்பட்டதாக தேர்வர்கள் டிஆர்பியில் புகார் அளித்தனர். சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் இது தொடர்பாக 300க்கும் மேற்பட்ட வழக்குபதிவு செய்யப்பட்டன.இந்நிலையில் சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் நாளை மறுநாள் இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வருகின்றன. வழக்கு நடந்து வருவதால் தேர்வு முடிவுகள் வெளியாகி 2 மாதங்கள் ஆகியும், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதையும் டிஆர்பி செய்ய முடியவில்லை.
இதே நிலை நீடித்தால் இந்த கல்வி ஆண்டில் ஆசிரியர் நியமனம் செய்ய முடியாது. எனவே நாளை மறுநாள் டிஆர்பி மீதான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment