scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

January 11, 2014

2342 கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு ஜூன் 15-ம் தேதி தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தமிழ்நாட்டில் துணை கலெக்டர், வணிகவரி உதவி ஆணையர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட பலவகையான குரூப்-1 அதிகாரிகள், குரூப்-2 அலுவலர்கள் தேர்வு, குரூப்-4 மூலம் இளநிலை உதவியாளர் பணியாளர்கள் தேர்வு, கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ.) உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள், பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
அதில் கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ) பணியிடங்களுக்கு 2342 பேரை தேர்ந்தெடுக்க ஜூன் 15-ம் தேதி தேர்வு நடத்த உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே போல் குரூப்-2 பணியிடங்களுக்கு 1181 பேரை தேர்ந்தெடுக்க மே 18ம் தேதி தேர்வு நடக்கும் என்றும் இதற்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment