மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி அறிவிப்பு மானிய விலைசமையல் எரிவாயு சிலிண்டர் 12 ஆக உயர்வு.
மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை ஆண்டிற்கு 12 ஆக
உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்
வீரப்ப மொய்லி அறிவித்துள்ளார். ராகுல் கோரிக்கையை
ஏற்று சிலிண்டர் எண்ணிக்கையை 9-லிருந்து 12ஆக உயர்த்தப்படுவதாக பெட்ரோலிய
அமைச்சர் மொய்லி தெரிவித்துள்ளார்.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி சிலிண்டர் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தக்
கோரினார். ஆண்டுக்கு 12 சிலிண்டர் வழங்க மத்திய அமைச்சரவை கூடி
முடிவெடுக்கும் என்று அமைச்சர் மொய்லி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment