பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வை பள்ளிகள் மூலம் எழுத உள்ள
மாணவர்களின் சரியான விவரங்கள் சேகரித்து தேர்வுத் துறைக்கு அனுப்ப வேண்டும்
என்று அறிவிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும்
பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலகங்களில் கணினியில் பதிவு செய்யப்பட்டன. இந்த பட்டியல்கள் அடங்கிய
சிடிக்கள் 30ம் தேதி நேரடியாக தேர்வுத்துறைக்கு வந்து சேர்ந்தன. 32 மாவட்டங்களில் இருந்து வந்த பட்டியல்களை தேர்வுத்துறை அதிகாரிகள் பெற்று தேர்வுத் துறை கணினியில் பதிவு செய்தனர்.பின்னர் நேற்று அனைத்து மாவட்டங்களுக்கும் செக் லிஸ்ட், ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செக்லிஸ்ட்டில் திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியது இருந்தால் இன்று தொடங்கி நாளைக்குள் www.tndge.in என்ற இணைய தளத்தில் நேரடியாக திருத்தங்களை செய்யலாம். செக்லிஸ்ட்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்து பெறலாம் என்றும் தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதையடுத்து 10ம் தேதிக்கு பிறகே பட்டியல்கள் இறுதி செய்யப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
எக்ஸ்ட்ரா தகவல்:
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் சுமார் 10 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களும், பிளஸ் 2 தேர்வில் 8 லட்சம் மாணவர்களும் எழுதுவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment