(26.12.2014) சென்னை, திருவல்லிக்கேணியில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், பேராசிரியர் நரசிங்கம் நிலையத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.வின்சென்ட் பால்ராஜ் அவர்கள் தலைமையில் டிட்டோஜாக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து சங்கங்களும் பங்கு பெற்றன.
கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தவிர்த்த பிற சங்கங்கள் அனைத்தும் பேரணி நடத்தலாம் என்றும், ஆர்ப்பாட்டம் நடத்தலாம் எனவும் கூறின. ஆனால் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மட்டும் ஏற்கனவே ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் என அனைத்தும் நடத்தி விட்டோம் எனவும், இனி மாவட்ட அளவில் போராட்ட ஆயத்தக்கூட்டம் நடத்திவிட்டு அடையாள வேலைநிறுத்தம் அல்லது தொடர் வேலைநிறுத்தம் மேற்கொள்ளலாம் எனக் கூறியது. போராட மனமில்லாத பிற இயக்கங்கள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கூட்டத்திலிருந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பாதியிலேயே வெளியேறியது.
உண்மை நிலையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இப்பதிவு.

No comments:
Post a Comment