கேள்வி 3 - சான்றிதழ் சரிபார்ப்பின் போது முன்னதாக அரசு பணியில் பணிபுரிபவர்கள் தங்கள் துறையின் தடையின்மை சான்றினை ( No Objection Certificate ) சமர்பிக்க வேண்டுமா?
பதில் -
முன்னதாக அரசு பணியில் இருப்பவர்கள் TET அல்லது PG TRB தேர்வில் வெற்றி பெற்று உயர் பதவியில் செல்வதற்கு தங்கள் துறையின் உயர் அதிகாரியிடம், குறிப்பாக Appointing Authority யிடம் [ S.G Asst என்றால் DEEO-விடமும்,B.T Asst என்றால் Joint Director (பணியாளர் தொகுதி)-யிடமும்] தடையின்மை சான்று பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெற்றிருந்தால் தான் தாங்கள் தங்களின் முந்தைய பணியிலிருந்து "பணி விடுவிப்பு” செய்யப்படுவீர்கள். இல்லையேல் தங்கள் முந்தைய பணியை "பணிதுறப்பு” மட்டுமே செய்ய அனுமதிக்கப்படுவீர்கள். மேலும் தடையின்மை சான்றிதழ் பெறவில்லையெனில் முந்தைய பணியிலிருந்து விடுவிக்கப்படும் போது, உயர் அலுவலகத்தில் இதற்கான தங்கள் விளக்கத்தை சமர்பித்து விட்டு புதிய பணியில் சேருவதற்கு காலதாமதம் ஏற்படும். இதனால் புதிய பதவியில் தங்கள் மாநில அளவிலான பணி மூப்பு பாதிக்கப்படும். எனவே முறையாக துறை அனுமதியை பெற்று அவற்றை தங்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது சமர்பிப்பது தேவையற்ற அலைகழிப்பை தவிர்க்க இயலும்.
No comments:
Post a Comment