அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களில் பணியாற்றும் 47
மேற்பார்வையாளர்கள், 17 ஆசிரியர் பயிற்றுநர்களும் மேல்நிலை பள்ளிகளில்
முதுநிலை ஆசிரியர்களாக மாறுதல் செய்யப்பட உள்ளனர். மேலும், 1.1.13
தேதியில் வெளியிடப்பட்ட தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியலில் இடம்
பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் 897 பேருக்கு பதவி உயர்வு இன்று பதவி
உயர்வு வழங்கப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க
தலைவர் தியாகராஜன் கூறியதாவது: தொடக்கப் பள்ளிகளில் கடந்த 2004-2005ம்
ஆண்டு முதல் 23,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால்
அவர்களுக்கு இதுவரை பதவி உயர்வு என்பதே வழங்கப்படவில்லை.
இவர்களில்
உயர்நிலை பள்ளிகளில் நியமிக்கப்பட்டவர்கள், ஆதிதிராவிடர் நலத்துறை
பள்ளிகளில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி
ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கி வருகின்றனர். ஆனால் தொடக்க பள்ளிகளில்
நியமிக்கப்படும் பட்டதாரிகளுக்கு பதவி உயர்வே வழங்கப்படாத நிலை உள்ளது. இதை
தவிர்க்க, நேரடி நியமனங்கள் செய்யும் போது, 50 சதவீதத்தில் 25 சதவீதம்
பேரை தொடக்க பள்ளி பட்டதாரிகளில் இருந்து எடுத்து பதவி உயர்வு வழங்க அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று நடக்க உள்ள கவுன்சலிங்கில் எங்களுக்கும்
வாய்ப்பு அளிக்க வேண்டும்.
No comments:
Post a Comment