scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

December 18, 2013

வருமான வரி செலுத்தும் சம்பளதாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்

வருமான வரி செலுத்தும் சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நடப்பு நிதி ஆண்டிற்கான வரி சேமிப்பு திட்டங்கள், பிடித்தம் செய்யப்பட வேண்டிய தொகை குறித்த விவரங்களை பணிபுரியும் நிறுவனங்களுக்கு சம்பளதாரர்கள் தெரிவிக்க வேண்டும்.

வீட்டு வாடகைப்படி
ஆண்டு வருமானத்திலிருந்து வீட்டு வாடகையை கழிப்பது தொடர்பான விதிமுறைகளில் இந்த ஆண்டு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆண்டிற்கு ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக வீட்டு வாடகை செலுத்துபவர்கள் வீட்டு உரிமையாளரின் ‘பான்’ எனப்படும் நிரந்தர வருமான வரி கணக்கு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.
வீட்டு உரிமையாளரிடம் ‘பான்’ அட்டை இல்லையென்றால், அவரிடமிருந்து ஒரு உறுதிமொழியை பெற்று அதனுடன் அவரது பெயர் மற்றும் முகவரியை முழுமையாக தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்.

புதிதாக வீடு வாங்குவர்களுக்கு நடப்பு நிதி ஆண்டில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, வீட்டுக்கடன் வாங்குபவர்கள் வருமான வரிச் சட்டம் பிரிவு ‘80 இஇஇ’-ன் கீழ் அவர்கள் செலுத்தும் வட்டியில் கூடுதலாக ரூ.1 லட்சத்தை ஆண்டு வருமானத்திலிருந்து கழித்து கொள்ளலாம். இந்த நிதி ஆண்டில் அவர் செலுத்தும் வட்டி ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் அடுத்த நிதி ஆண்டில் எஞ்சியுள்ள தொகைக்கு வருமான வரிச் சலுகை பெறலாம்.
இந்த சலுகையை பெறுவதற்கு வாடிக்கையாளர் பெறும் வீட்டுக்கடன் ரூ.25 லட்சத்துக்கும் குறைவாகவும், வாங்கும் வீட்டின் மதிப்பு ரூ.40 லட்சத்துக்கும் அதிகமாகவும் இருக்க கூடாது. மேலும், கடன் பெற்ற தினத்தன்று வாடிக்கையாளர் சொந்தமாக வீடு வைத்திருக்க கூடாது.
குறைந்த வருவாய் பிரிவினர்
வரி விதிப்பிற்கு உட்பட்ட ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு இந்த நிதி ஆண்டில் ரூ.2,000 வரித் தள்ளுபடி (டாக்ஸ் ரீபேட்) அளிக்கப்படுகிறது. அவர் செலுத்த வேண்டிய வரி அல்லது ரூ.2,000 இதில் எது குறைவானதோ அந்த தொகைக்கு தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment