scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

December 26, 2013

இன்றைய டிடோஜாக் கூட்டத்தின் முக்கிய முடிவுகள்

இன்று (26.12.2014) சென்னை திருவல்லிக்கேணி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், பேராசிரியர் நரசிங்கம் நிலையத்தில் தமிழக
ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.வின்சென்ட் பால்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து சங்கங்களும் பங்கு பெற்றன. பேரணியை ஏற்கெனவே தாங்கள் நடத்திவிட்டோம் எனவும், மீண்டும் பங்கு கொள்ளமாட்டோம் என முக்கிய சங்கம் பாதியிலேயே வெளியேறியது. பின்பு மற்ற 6 சங்கங்கள் கூடி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. 


வருகிற 30.12.2013 அன்று தமிழக அரசுடன்  சந்தித்து கோரிக்கை வைக்கப்பட உள்ளது. 

அதையடுத்து 10.01.2014ல் மாவட்ட அளவில் டிடோஜாக் கூட்டம் நடத்தவும்

11.01.2014 அன்று டிடோஜாக் சார்பில் செய்தியாளர்களுடன் சந்திப்பு (PRESS MEET)ம்

02.02.2014 அன்று மாவட்ட தோறும் பேரணி நடத்தி மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எனினும் வெளியேறிய சங்கத்துடன் மீண்டும் சந்தித்து பேரணியில் பங்கு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment