மாதிரி பள்ளிகளை தொடங்கும் மத்திய அரசின் திட்டப்படி, தமிழ்நாட்டில் 44
மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் 11 பள்ளிகளுக்கு கட்டிடம்
கட்டும் பணி முடிந்துவிட்டது. 7 பள்ளிகளுக்கு கட்டிட பணி முடியும் நிலையில்
உள்ளது. 2–வது கட்டமாக 26 பள்ளிகளுக்கும், விடுதிகளுக்கும் கட்டிடம்
கட்டப்பட உள்ளது.இதற்காக மத்திய அரசு கொடுத்த நிதியுடன், கட்டிட செலவு
அதிகரித்துள்ளதால்மத்திய அரசு கொடுத்த நிதி போக, தேவைப்படும் எஞ்சிய
நிதியையும் தமிழக அரசு ஏற்றுள்ளது. அதன்படி ரூ.177 கோடியே 44 லட்சத்தை
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கி உள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர்
தெரிவித்தார். 500 பள்ளிகளை தரம் உயர்த்த இடைநிலை கல்வி திட்டத்தின்படி
வருகிற கல்வி ஆண்டில் 500 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக தரம்
உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம் என்றும் அவர்
கூறினார்.
No comments:
Post a Comment