ஈரோடு சி.இ.ஓ., அலுவலகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கான, மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது.கடந்த, 2009ல், மத்திய அரசு குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமை
சட்டத்தை நிறைவேற்றியது. தமிழகத்தில், ஆசிரியர் பணியிட நியமனத்துக்காக, டி.ஆர்.பி., நேரடி எழுத்துத்தேர்வு மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில் என, இரண்டு வகையிலும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
முதன் முறையாக ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிக்கப்பட்டது.ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, ஆசிரியர் வேலைக்கு வரவேண்டுமென விரும்பும்,இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் என, இரு வகையினரும், இத்தேர்வை எழுத, ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டது.கடந்த, 2012, அக்டோபர் மாதத்தில், ஆசிரியர் எழுத்துத்தேர்வு நடந்தது. தேர்வு எழுதியவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கும் பணி, தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டத்தில் நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.முதல் தாள் தேர்வெழுதிய, 580 பேருக்கும், இரண்டாம் தாள், 386 பேருக்கும் சான்றிதழ் வந்துள்ளதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment