தமிழகத்தில் மொத்தம் ஒரு கோடியே 90 லட்சம் ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. கடைசியாக, தமிழகத்தில் 2005ல் பழைய ரேஷன் கார்டுக்கு பதில் புதிய கார்டு வழங்கப்பட்டது. 2010ல் புதிய ரேஷன் கார்டு
வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 2010 முதல் 2013வரை தொடர்ந்து 4 ஆண்டுகள் பழைய ரேஷன் கார்டுகளிலேயே ‘உள்தாள்‘ ஒட்டப்பட்டது. ஒரே ரேஷன் கார்டை 9 ஆண்டுகள் உபயோகித்து விட்டதால், ரேஷன் கார்டு கிழிந்து விட்டது.2012 இறுதிக்குள் மின்னணு ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளதால், புதிய ரேஷன் கார்டு வழங்கப்படவில்லைஎன்று 2 ஆண்டுகளுக்கு முன் அதாவது, 2012 டிசம்பர் மாதம் அரசு அறிவித்தது. ஆனால் அறிவிக்கப்பட்டுஇரண்டு ஆண்டு ஆகியும் மின்னணு ரேஷன் கார்டுவழங்கப்படவில்லை. இந்நிலையில் வரும் 2014ம் ஆண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படுமா அல்லது மின்னணு ரேஷன் கார்டு வழங்கப்படுமா அல்லது வழக்கம்போல் உள்தாள் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்படுமாஎன்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசின் சார்பில் வெளியாகவில்லை.உணவு வழங்கல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “மின்னணு ரேஷன் கார்டு வழங்க இருப்பதால் புதிதாக ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் இல்லை. ஆதார் அடையாள அட்டைக்கான பணி தமிழகம் முழுவதும் வேகமாக நடைபெற்று வருகிறது.இதில் பதிவாகும் தகவல் மற்றும் அடையாளங்களை பயன்படுத்திதான்மின்னணு ரேஷன் கார்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்போதுதான் போலி ரேஷன் கார்டுகளையும், ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளையும்தடுக்க முடியும். கடந்த 2013 ஜனவரி மாதம் உள்தாள் ஒட்டும்போதே 2014 முழுவதும் பயன்படுத்துவதற்கு வசதியாக உள்தாள் ஒட்டப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அதையே பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்படும். இல்லையென்றால் வரும் ஜனவரி மாதம் ரேஷன் கார்டுகளில் புதிதாக உள்தாள் ஒட்டுவது குறித்து உணவு அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தி டிசம்பர் மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும். ஆனால் 2014ல் புதிய ரேஷன் கார்டு வழங்க வாய்ப்பே இல்லை. 2015ம் ஆண்டு எப்படியும் மின்னணு ரேஷன் கார்டு வழங்குவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது“ என்றார்.
No comments:
Post a Comment