தமிழகத்தின்
தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர் அமைப்பின் அனைத்து சங்கங்களின் மாநில
பொதுச்செயலர்கள்,தலைவர்கள்,பொருளாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட
தொடக்கக்கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின்(
TAMILNADU ELEMENTARY TEACHERS ORGANIZATION JOINT ACTION COMMITTY
)பொதுக்குழு கூட்டம் 9/11/13 அன்று காலை 11.00 மணியளவில் தமிழ்நாடு
தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநிலஅலுவலகமான ஜே.எஸ்.ஆர்மாளிகையின்
முதல் தள கூட்ட அரங்கில் கூடியது.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர் சங்கங்கள்,
1.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
2.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
3.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
4.தமிழக ஆசிரியர் கூட்டணி
5.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
6.தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
மற்றும்
7.தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் .
ஆகியன.
சுமார் இரண்டு மணிநேர கருத்துரையாடலுக்கு பின்னர்
அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது
கடந்த கால நிகழ்வுகளை மறந்து ஒற்றுமையுடன்
"WE FOR SECONDARY GRADE TEACHERS" என்ற கோட்பாட்டின் படிஇடைநிலை ஆசிரியர் வாழ்வாதாரப்பிரச்சினையான ஊதியக்குறைபாட்டினைக்களைய பாடுபடுவது என ஒருங்கிணைந்த கருத்துடன்
1.இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தினை மத்திய அரசு வழங்குவதுபோல
மாநில அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்

2.பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து,பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்
என்ற இரு கோரிக்கைகள் மட்டும் டிட்டோ ஜாக் -ன் கோரிக்கைகளாக அனைவராலும் ஏகமனதாக ஏற்று கொள்ளப்பட்டது
அடுத்தகட்டமாக
முதலில் தொடக்கக்கல்வித்துறை சார்ந்த சங்கங்கள் இனைந்து போராட முடிவெடுத்துள்ளதை அரசுக்கும் ,கல்வித்துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கும் முரையாக தெரியப்படுத்தும் விதமாக வரும் 13/11/13 அன்று
மாண்புமிகு முதலமைச்சர்,
மாண்புமிகு நிதியமைச்சர்,
மாண்புமிகு கல்வியமைச்சர், ஆகியோர்களுக்கும்,
தமிழக அரசின் தலைமைச்செயலர்,
தமிழக அரசின் நிதிதுறைச் செயலர்,
தமிழக அரசின் கல்வித்துறைச் செயலர்,
மற்றும்
கல்வித்துறை சார்ந்த இயக்குனர்கள்
அனைவரையும்
7 சங்க பொறுப்பாளர்கள் ஒன்றினைந்து சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளிப்பது என்றும்,
வரும் 20/11/13 அன்று
அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றியும், மாவட்ட ,வட்டார அளவில் டிட்டோஜாக் கமிட்டிகள் அமைப்பது குறித்தும் பேச்சுநடத்த ஏதுவாக மாநில டிட்டோ ஜாக் அமைப்பின் பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகமான “முத்துசாமி அரங்கில்” நடைபெறும் என்றும் முடிவாற்றப்பட்டது,
அது சமயம் அனைத்து சங்கங்களின் மாவட்ட பொறுப்பாளர்களின் (தலைவர்,செயலர்,பொருளர்) பட்டியல் கொண்டு வரக்கேட்டுக்கொள்ளப்பட்டது
மேலும் டிட்டோ ஜாக் மாநில அமைப்பின் தொடர்பு அலுவலகமாக
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அலுவலகமே செயலாற்றஅனைவராலும் தீர்மானிக்கப்பட்டது.
No comments:
Post a Comment