நண்பர்களே தகவல் தொழில் நுட்பத்தின் அபரிமித வளர்ச்சி அன்றாட மனித வாழ்வில் தொழில் நுட்பத்தை ஓர் தவிர்க்க முடியாத அங்கமாக மாற்றியுள்ளது. இப்
பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கமான இணையம் (Internet) மற்றும் அலைப்பேசியின் (MOBILE) தோற்றமும் அதன் துரித வளர்ச்சியும் நம்மை பிரமிக்க வைக்கின்றது. பள்ளி செல்லும் மாணவனாயினும் சரி ஓய்வு பெற்ற வயோதிகராயினும் அவர்களின் அன்றாட வாழ்வில் தன்னை ஒரு தவிர்க்க முடியாத சாதனமாக இணையமும் அலைபேசியும் நிலை நிறுத்தி கொண்டுள்ளது
நவீன தகவல் தொடர்பு
சாதனங்கள் எந்த அளவுக்கு உபயோகமாக, மிக
திறன்மிக்கதாக இருக்கிறதோ அதே அளவுக்கு மிக மிக ஆபத்தானதும் கூட
குழந்தைகள் அனைவரும் நல்லவர்களே. ஆனால்
இணையத்தின் கட்டுப்பாடற்ற சுதந்திரம், எவ்வித
தணிக்கை முறையும் மில்லாத ஊடகத்தின் கூர்மையான பக்கங்கள் உங்கள் குழந்தைகளின் வெள்ளை மனதில் ஆழமான பாதிப்பினை ஏற்படுத்தி, தீய
வழியில் செலுத்த வாய்ப்பிருக்கிறது
பிள்ளைகள் நல்ல மனப்பக்குவமடையும் வரை இணையத்தின் முள்ளில்லா பாதைகளில் கரம் பிடித்து நடை பழக்குவதும் கூட ஒவ்வொரு பெற்றோரின் கடமை தான் .
சைபர் கிரைம்
எனப்படும் இணைய குற்றங்களை பற்றி தமிக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த
, சமூக விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பாதுகாப்பு என்னும் தலைப்பில் குறுவள மைய
பயிற்சிக்காக தயாரித்த பவர்பாயின்ட் பிரசன்டேஷன் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து
கொள்ள அனைவருக்கும் பயன்பட உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் . கீழே உள்ள
பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி பயன்பெறுங்கள் .