scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

October 03, 2013

குழந்தைகளுக்குத் தோற்கக் கற்றுக்கொடுங்கள்


இந்த ஆண்டு பள்ளிப் பருவம் முடியும் காலத்தில், விளையாட்டுப் போட்டிகளுக்குப் பெயர் கொடுக்கும் தருணத்தில் ஒன்றை மறந்துவிடாதீர்கள். இந்தப் போட்டிகளில் எந்தக் குழந்தைக்குப் பரிசு தருவீர்கள் என்று கேளுங்கள். போட்டியில் கலந்துகொள்ளும் எல்லாக் குழந்தைகளுக்குமே பரிசு உண்டு என்று சொன்னால் உங்கள் குழந்தையைப் போட்டியிலிருந்து விலக்கிக்கொள்ளுங்கள்.

ஒரு காலத்தில் பதக்கம், கேடயம், கோப்பை என்பவையெல்லாம் அரிதாக இருந்தன. மிகப் பெரிய உயர்நிலைப் பள்ளியாக இருந்தாலும் ஓரிருவருக்கு மட்டுமே அவை கிடைத்தன. அதனால், அந்தப் பரிசுகளுக்கே தனி மரியாதை இருந்தது. இப்போது போட்டியை நடத்துகிறவர்கள் வசூலிக்கும் பணத்தில் கால்வாசியைப் பரிசுகள் வாங்குவதில் செலவிடுகிறார்கள். 1960-களுக்குப் பிறகு, இந்தக் கோப்பைகளையும் கேடயங்களையும் பதக்கங்களையும் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். எனவே, பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் விளையாட்டுப் பயிற்சி ஆசிரியர்களுக்கும் அணி பயிற்றுநர்களுக்கும் சாம்பிள்களைத் தந்து வியாபாரத்தைத் தொடங்கிவிட்டார்கள்.
இன்றைக்கு எல்லாக் குழந்தையுமே ஏதாவது பரிசைக் கட்டாயம் வாங்கிவிடும் என்று கூறும் வகையில் போட்டிகளை ரக வாரியாகப் பிரித்து நடத்துகிறார்கள். மேரிலேண்டில் உள்ள அமைப்பு ஒன்று தினமும் ஏதாவது போட்டி நடத்திப் பரிசுகளை வழங்குகிறது. அந்த தினமும்கூட பரிசளிப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கிறது.
தெற்கு கலிஃபோர்னியாவில், அமெரிக்க இளைஞர் கால்பந்து அணியின் கிளையொன்று ஒவ்வொரு கால்பந்துப் பருவத்திலும் சுமார் 3,500 விருதுகளைப் போட்டியாளர்களுக்குக் கொடுக்கிறது. எல்லா விளையாட்டு வீரரும் நிச்சயம் ஒன்று வாங்கிவிடுகிறார். மூன்றில் ஒரு பங்கு வீரர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகளை வாங்குகின்றனர்.
தேசிய அளவில் எல்லா இளைஞர், மாணவர் விளையாட்டு அமைப்புகளும் தங்களுடைய வருடாந்திர வரவு-செலவுத் திட்டத்தில் பரிசுகளுக்கே 12% செலவிடுகின்றன.
அமெரிக்காவிலும் கனடாவிலும் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 19,000 கோடி ரூபாய் மதிப்புக்கு இந்தப் பதக்கங்கள், கேடயங்கள், கோப்பைகள் விற்பனை நடக்கின்றன. போ பிரான்சனும் நானும் குழந்தைகளைத் தேவைக்கு அதிகமாகப் பாராட்டிப் புகழ்வதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து நிறைய எழுதிவருகிறோம். இதில் அறிவியல் தெளிவாக இருக்கிறது. விருதுகளை வழங்குவதால் குழந்தைகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஏற்படுகிறது என்பது உண்மைதான். இடைவிடாமல் பரிசுகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தால், குழந்தைகளுக்கு அவை வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதலைத் தருவதில்லை. மாறாக, அவர்கள் தங்களுடைய திறமையை முழுதாகக் காட்டாமல் சுமாராக விளையாட வழிவகுத்துவிடுகிறது.
“பெரியவர்கள் பாராட்டும்போது குழந்தைகள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுகின்றனர். தங்களைத் திறமைசாலி, அறிவாளி என்று புகழ்வதைக் கேட்டு மன மகிழ்ச்சி அடைகின்றனர். தங்களுடைய திறமை, அறிவு குறித்த பாராட்டுகளையெல்லாம் கேட்ட பிறகு, எதிலாவது தோல்வி அல்லது சவால் ஏற்பட்டால் மனம் சோர்ந்து விழுந்துவிடுகின்றனர்” என்று எச்சரிக்கிறார் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் துறை நிபுணர் கரோல் துவெக். மேலும், தோற்றுப்போய்ப் பெயரைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் சிலர் தில்லுமுல்லுகளைச் செய்து பாராட்டு பெறவும் முயற்சிக்கின்றார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
சமீபத்தில் பிராட்லே மோரிஸ், ஷானான் ஜென்டால் என்ற இரு ஆய்வாளர்கள் சில குழந்தைகளை அழைத்துப் படம் வரையச் சொல்லி அவர்களைக் கண்காணித்தனர். நல்ல புத்திசாலி, எந்தக் காரியத்தையும் நன்றாகச் செய்வான் என்றெல்லாம் தேவையில்லாமல் புகழப்பட்ட சிறுவர்கள் மற்றவர்களைவிட அதிக நேரம் ஓவியம் வரைய வேண்டிய பலகையையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் பார்க்கிறார்கள், தப்பில்லாமல் வரைய வேண்டுமே என்ற அச்சமே அவர்களுடைய தயக்கத்துக்குக் காரணமாக இருந்தது. 4 அல்லது 5 வயதுக் குழந்தைகள் இந்தக் கோப்பைகள், கேடயங்களுக்கெல்லாம் மகிழ்ந்து முட்டாளாவதில்லை. ஒரு விளையாட்டில் அல்லது கலையில் யார் கெட்டிக்காரர்கள், யார் திறமையற்றவர்கள் என்பதை அவர்கள் துல்லியமாகவே தெரிந்துகொள்கின்றனர். விளையாட முடியாமல் தவிப்பவர்கள், இந்தப் பாராட்டுகளுக்கெல்லாம் மயங்கும் வேலையை விட்டுவிடுகின்றனர். நன்றாக விளையாடிச் சாதிப்பவர்கள், நம்மைப் பாராட்டாமல் மற்றவர்களுக்கே பாராட்டை வழங்கினார்களே என்று கொதிப்படைகிறார்கள்.
ஒரு குழந்தைக்கு ஏதேனும் ஒரு விளையாட்டிலோ கலையிலோ உண்மையான திறமை இருந்தால், அதை விளையாடுவதில் உள்ள இன்பமும் முடிவு எப்படி இருக்குமோ என்று இனம்புரியாத மர்மமும் அவர்களை நன்றாகத் திறமைகாட்ட வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பதக்கமும் பரிசுகளும் அதற்குத் தேவையே இல்லை. கலந்துகொண்டாலே ஒரு பரிசு நிச்சயம் என்றால், முன்னேற்றத்துக்கு அங்கே என்ன இருக்கும்? தாண்டுவதற்குத் தடைகளே இல்லை எனும்போது, எதற்காக மண்டையைப்போட்டுக் குடைந்துகொள்ள வேண்டும் என்ற மெத்தனம் வந்துவிடும்.
குழந்தைகளை வளர்க்கும்போது பாராட்டுவதைப் போல தண்டிப்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எடுத்ததற்கெல்லாம் தண்டித்துவிடக் கூடாது. தவறு செய்தால் சுட்டிக்காட்டித் திருத்த வேண்டும். தவறு ஏன் நடந்தது என்று ஆராயாமல் தண்டிக்கக் கூடாது. தனிப்பட்ட முறையில் அவர்கள் அதை உணர்ச்சிவசப்பட்டு செய்தார்களா, சூழல் காரணமா, வெளிக் காரணம் உண்டா என்றெல்லாம் பார்க்க வேண்டும். அவர்களைக் கண்காணிக்க வேண்டும். எதிர்மறையான எண்ணம், செயல்பாடு இருந்தால் சுட்டிக்காட்டி அதை மாற்ற வேண்டும்.
தவறு செய்தால் தவறு செய்தவர்களை மட்டும் தண்டித்துத் திருத்தும் நாம், பாராட்டும்போது எல்லோரையும் பாராட்டுவது சரியல்ல. அது அவர்களுடைய வளர்ச்சிக்கு உதவாது. நன்றாகச் செயல்பட்டார்களோ இல்லையோ எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க எல்லோருக்கும் பரிசு தர வேண்டும் என்ற மனப்பான்மை சரியல்ல. இன்று சில சிறுவர்களுக்குச் செய்யும் இதையே நாளை சமூகத்துக்கும் செய்ய வேண்டியிருக்கும்.
“வீட்டின் வரவேற்பறை முழுக்கக் கோப்பைகளையும் கேடயங்களையும் அடுக்கி வைத்துக்கொள்ளும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. இதைத் தங்களுடைய திறமையைப் பறைசாற்றும் கலாச்சாரமாகவே பலர் கடைப்பிடிக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை திறமையை முழுமையாகக் காட்டுகிறார்களோ இல்லையோ, எல்லாப் போட்டிகளிலும் பங்கேற்றுவிட வேண்டும் என்பதே லட்சியமாக இருக்கிறது. இவர்களே படித்து முடித்து வேலைக்குப் போகும்போது, தினமும் அலுவலகம் செல்வதை வழக்கமாகக் கொள்கின்றனர். அங்கே போய் செய்யும் வேலையின் தரம்குறித்து அவர்களுக்குக் கவலையில்லை. ஒரு நாள்கூட விடாமல் அலுவலகம் போய்வருவதையே சாதனையாகக் கருதுகின்றனர். தினமும் அலுவலகம் போய்வருவதற்காகவே தங்களுக்குப் பதவி உயர்வு தரப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள் என்கிறார் ழான் டுவென்ஞ்.
“எவ்வளவு திறமை இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் வெற்றி பெறுவதைவிட தோல்விபெறும் தருணங்களே அதிகமாக இருக்கும். எனவே, தோற்றாலும் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்துவதற்கான மனப்பக்குவம் வேண்டும்” என்கிறார் உளவியல் அறிஞர் ழான் டுவென்ஞ்.
குழந்தைகள் தவறு செய்யும்போது அவற்றை அழகான வெற்றிகளாகத் திரிப்பது நம்முடைய வேலையாக இருந்துவிடக் கூடாது. அவர்கள் அதில் உண்மையாகவே திறமை காட்டி வெற்றி பெற நாம் உதவ வேண்டும். ஒரு செயலில் கிடைக்கும் வெற்றி,தோல்வியைவிட, அந்த வெற்றியை அடைய எவ்வளவு விரைவில் அந்தத் திறமையை அவர்களுக்கு நாம் ஊட்டுகிறோம் என்பதே முக்கியம். நம்முடைய குழந்தை தோற்றாலும் வென்ற குழந்தையைப் பாராட்டும் பண்பை நாம் கற்றுத்தர வேண்டும். அதற்கு நாம் இந்த பிளாஸ்டிக், பித்தளை, அலுமினியத்தாலான பொருள்களைப் பரிசுகள் என்ற பெயரில் வாங்கிக் குவிப்பதற்குத் தரும் முக்கியத்துவத்தைக் குறைக்க வேண்டும். கோப்பைகள், பதக்கங்கள், கேடயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளின் லாபத்துக்காக நம்முடைய குழந்தைகளின் வாழ்க்கையை நாம் பலிகொடுக்கக் கூடாது.

No comments:

Post a Comment