கம்ப்யூட்டர்
வசதியை பயன்படுத்தி ஸ்கைப்’ மூலம் வெளிநாட்டு மாணவர்களுடன் பேசும் வசதி
தமிழ்நாட்டு அரசு பள்ளிகளில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
மாணவர்களுக்குசலுகைகள் தமிழ்நாட்டில்
கல்வித்துறையை மேம்படுத்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா அதிக திட்டங்களை
செயல்படுத்தி வருகிறார். மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கவும், படிப்பை
தொடர்வதற்கும் வசதியாக விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள்,
புத்தகப்பை, சைக்கிள்கள், அட்லஸ், கலர்பென்சில், ஜியோமெட்ரிக் பாக்ஸ்
முதலிய சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் வகுப்பறை கல்வியை மேம்படுத்த புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை கொண்டு வந்துள்ளது.
அதன்படி
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதல்கட்டமாக 5 உயர்நிலைமற்றும்
மேல்நிலைப்பள்ளிகள், 4 நடுநிலைப்பள்ளிகள் ஆகியவற்றை தேர்ந்து
எடுத்துள்ளனர். இப்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும்
கம்ப்யூட்டர்கள் உள்ளன. இவற்றில் பல பள்ளிகளில் இணையதள வசதிஉள்ளது.ஆசிரியர் வராவிட்டாலும் பாடம் நடத்தப்படும். இந்த இணையதள வசதியை பயன்படுத்தி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தில் பாடம் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக
இருதயம் என்றால் இருதயத்தை கம்ப்யூட்டரில் காண்பித்து பாடம் நடத்தப்படும்.
இதனால் மாணவர்கள் ஏட்டில் படிப்பதை விட நேரில் காணும்போது மனதில் நன்றாக
பதிந்து விடும்.
பள்ளிக்கூடத்தில்
ஒரு ஆசிரியர் விடுமுறை என்றால் அன்று ஆசிரியர் இல்லாமல் அல்லோலப்படும்.
இதை தவிர்க்க ஏற்கனவே ஆசிரியர் வகுப்பு எடுத்ததையும், அடுத்து
எடுக்கப்போகும் பாடத்தையும் அவர் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து இருந்தால்
அதுவும் போட்டு காண்பிக்கப்படும். இது பெரிய திரையில் தெரியும். உண்மையில்
ஆசிரியர் பாடம் நடத்துவது போல இருக்கும்.
இந்த
கம்ப்யூட்டர்களில் ‘ஸ்கைப்’ வசதி இணைத்தால் மாணவர்கள் தமிழ்நாட்டில்
இருந்து கொண்டே உலகில் எந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூட மாணவர்களிடமும்
பேசலாம். இங்குள்ள கலாசாரம், பண்பாடு உடை,கல்வி பற்றி பேசலாம். அங்கு உள்ள
மாணவர்களும் இங்குள்ள கலாசாரம், கல்விமுதலியவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
விரைவில் அமல்
மேலும்
ஆசிரியர் ஒருவர் சிறந்த முறையில் பல பொருட்களை உதாரணம் காண்பித்து பாடம்
நடத்தினால் அது அனைத்து பள்ளிகளிலும் வீடியோ கான்பரன்சிங் மூலம் தெரியும்.
இதை விரும்பும் பள்ளிகள் காணலாம்.
இந்த புதிய முறை பரீட்சாத்தமாக செய்து பார்க்கப்பட்டு உள்ளது.
விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் அமல்படுத்தப்படும். பின்னர் அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த உள்ளனர்.
No comments:
Post a Comment