சாதி
மதம் குறிப்பிடாமல் பள்ளியில் சேர்த்தது தொடர்பான பதிவைப் பார்த்து
நண்பர்கள் பலருக்கு தங்கள் குழந்தைகளையும் அப்படி சேர்க்க வேண்டும் என்ற
ஆசை வந்திருக்கிறது. சில நண்பர்கள் தாங்களும் தங்கள் குழந்தைகளை அப்படி
சேர்த்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தகவலை பகிர்ந்து கொண்டார்கள்.
சாதி மதம் குறிப்பிடாமல் பள்ளியில் சேர்க்க முடியும். அதற்கான அரசாணை நகல் இது.சாதி மதம் குறிப்பிட விரும்பாதவர்கள் இதை நகல் எடுத்து விண்ணப்பப் படிவத்துடன் கொடுக்கலாம்.
அதேசமயம் இன்னும் இடஒதுக்கீட்டை
பயன்படுத்தி மேல வரவேண்டிய தேவை உள்ள மக்கள் அதிகமாக இருக்கிறார்கள்
என்பதால் இதை எல்லா மக்களுக்கும் பொதுப்படையாக கடைப்பிடிக்க கூற முடியாது.
கட்டாயப்படுத்த முடியாது.
அதனால் ஓரளவுக்கு பொருளாதார ரீதியில்
முன்னேறியவர்கள், சாதி மதத்தை தூக்கி சுமப்பதிலிருந்து விடுதலையாக
விரும்புபவர்கள் மற்றும் இடஒதுக்கீட்டை பயன்படுத்த விரும்பாதவர்கள் இந்த
வசதியை பயன் படுத்திக்கொள்ளலாம். இது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம்.
இப்படி சேர்ப்பதால் பின்விளைவுகள் ஏதும்
ஏற்படுமோ என்ற தயக்கம் வரலாம். அரசின் இடஒதுக்கீட்டு சலுகை கிடைக்காது
என்பதை தவிர வேறு எந்த பின்விளைவும் கிடையாது.. மற்றபடி உங்கள்
விருப்பம்..
No comments:
Post a Comment