விடுதியில் மாணவன் கொலை செய்யப்பட்டதையடுத்து,
மாநிலம் முழுவதும் விடுதிகளை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் மாணவன் கொலை நடந்த பள்ளியின்
விடுதியை மூடுவதற்கு, முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டள்ளார்.
திண்டுக்கல் ம.மு.,கோவிலூர்
மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கியிருந்த ஆறாம் வகுப்பு மாணவன்
ஹரிபிரசாத்தை, அதே விடுதியில் தங்கியிருந்த 10ம் வகுப்பு மாணவன் கொலை
செய்தார். இதையடுத்து அந்த பள்ளியின் விடுதியை மூடுவதற்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் மாணவன் கொலை செய்யப்பட்ட
சம்வத்தையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி விடுதிகளை தலைமை
ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்கவும், மாணவர்களுக்குள்ள பிரச்னைகளை
உடனடியாக தீர்க்கவும், விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லாத மாணவ,
மாணவிகளை பெற்றோருடன் அனுப்பி வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment