scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

October 18, 2013

ஆசிரியர்களே! இது போன்ற சமூக அக்கறையும் நமக்கு தேவை

“ஒரு ஆசிரியரின் கடமை மாணவர்களுக்கு வெறும் பாடம் மட்டும் சொல்லிக்கொடுப்பதல்ல; நாளைய சமுதாயத்தை நல்ல சமுதாயமாக மாற்றவேண்டும் என்பது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்” என்று கூறும் ஆசிரியர் அன்புமணி, அவ்வாறாகவே வாழ்ந்து வருகிறார்.
ஆம்.
இன்றைய மாணவர்களை பொறுப்பானவர்களாக, சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களாக உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்பட்டுவருகிறார் அன்புமணி.
விதைகளைச் சேகரித்து, மண்ணைச் சுத்தப்படுத்தி, பாலிதீன் பைகளில் அடைத்து, அவற்றுள் விதைகளை நட்டு , எவ்வித செலவுமின்றி மரக்கன்றுகளை உருவாக்க மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார்.
மரக்கன்றுகளை வளர்க்க வனத்துறைக்கு அரசு நிதி ஒதுக்குகிறது.
ஆனால், மாணவர்களின் உழைப்பை மட்டும் மூலதனமாக்கி, ஏராளமான மரக்கன்றுகளை உருவாக்கியிருக்கிறார்.
சமுதாயத்துக்கு இயன்றதைச் செய்ய வேண்டுமென்ற தூண்டுதலால், இயற்கை வளங்களைப் பாதுகாக்கக்கோரும் தனது திட்ட அறிக்கைக்கு, மாணவர்களைக் கொண்டு செயல் வடிவம் கொடுத்துவருகிறார்.
மரங்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும், அதன் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.
அவரது முயற்சிக்கு உடனடி பலன் கிடைத்ததோடு, சிறுவர்கள் மீதான நம்பிக்கையை அவர் உருவாக்கியிருக்கிறார்.
இளம் தலைமுறையினரிடம் இயற்கையைப் பாதுகாக்கும் எண்ணைத்தை விதைத்து, அவர்களை இயற்கையின் பாதுகாவலர்களாக மாற்றிய அன்புமணி, ஒரு சமுதாயச் சிற்பி என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment