scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

October 05, 2013

இடமாற்ற கலக்கத்தில் ஆசிரியர்கள்

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டு, இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

பள்ளிகளில் ஆகஸ்ட் மாத மாணவர்களின் வருகை அடிப்படையில், ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. தொடக்க பள்ளிகளில் 30 மாணர்களுக்கும், நடுநிலைப் பள்ளிகளில் 35 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர் பணியிடம் வழங்கப்படுகிறது. கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் வேறு பள்ளிகளுக்கு இடம் மாற்றம் செய்யப்படுகின்றனர்.
அதன்படி, நடப்பாண்டிற்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், மாணவர்களின் வருகை பதிவை ஆய்வு செய்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மூலம், இயக்குனரகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளன.
பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்களே உள்ளதால், இடமாற்ற கலக்கத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment