scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

October 24, 2013

பள்ளி ஆங்கில வழி வகுப்புகளில் ஆங்கிலத்தில் மட்டுமே பேச ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில் ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
அரசு பள்ளியில் முதல் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பில் ஆங்கில
வழிக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கில வழியில் 6ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்பிற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நேற்று குகை மேல்நிலைப் பள்ளியில் அளிக்கப்பட்டது. இதில் 180 ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆங்கிலம், கணிதம்,அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களை ஆங்கிலத்தில் நடத்துவது குறித்து விளக்கப்பட்டது. டயட் விரிவுரையாளர்கள் பாடத்துக்கு இருவர் வீதம் பயிற்சி அளித்தனர்.
இது குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஈஸ்வரன் கூறியதாவது:
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில் ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசவும், பாடங்களை முழுமையாக ஆங்கில மொழியில் கற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக டயட் விரிவுரையாளர்கள் மூலம் தமிழ் தவிர மற்ற பாடங்களை ஆங்கிலத்தில் நடத்துவது குறித்து இரண்டு நாள் பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் பேச மாணவர்களை ஊக்குவித்தல் மற்றும் ஆங்கில வழியில் தொடர் முழு மதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. மாணவர்களின் முழுத்திறனையும் வெளிக்கொண்டு வரும் வகையிலும்,தனித்திறன்களை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கும் விதமாகவும் வகுப்பறையின் சூழலை மாற்றவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஆங்கில வழி வகுப்பில் ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்பது நடைமுறை படுத்தப்படுகிறது. இவ்வாறு முதன்மைக்கல்வி அலுவலர் ஈஸ்வரன் கூறினார்.

No comments:

Post a Comment