தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க மாநில ஆலோசனைக்
கூட்டம், காஞ்சிபுரத்தில் நடந்தது.மாநிலப் பொதுச் செயலர் கோவிந்தராஜு தலைமை
வகித்தார். மாநில கெüரவத் தலைவர் சுந்தரகணேஷ், மாநிலத் தலைவர் ராமர்,
துணைத் தலைவர்கள் பாபு, இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநிலத் துணைத்
தலைவர் முருகதாஸ் வரவேற்றார். பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தை மாதத்தின்
முதல் தேதியன்றே அவரவர் வங்கிக் கணக்கில் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் மரணமடைந்த 7 பகுதி நேர ஆசிரியர்களின்
குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல, தீபாவளி போனஸ், மருத்துவக் காப்பீடு,
விபத்துக் காப்பீடு, ஆசிரியைகளுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு
ஆகிய சலுகைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள்
வலியுறுத்தப்பட்டன.இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் சீனிவாசன்
உள்பட மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான ஆசிரியர்கள் கலந்து
கொண்டனர்.
No comments:
Post a Comment