ஏபிஎல் அட்டை பயிற்சியை குறை கூறுபவர்களின் பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்த அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் நடேசன்,
மாவட்ட பொருளாளர் சேகர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் நாட்டில்
எங்கும் இல்லாத அளவிற்கு நாமக்கல் மாவட்டத்தில் அனை வருக்கும் கல்வி
இயக்கம் மூலம் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு,
எளிமையாக்கப்பட்ட செயல் வழிகற்றல் பயிற்சி நடத்தப்படுகிறது. இது முதல்
பருவத் தேர்வை சீர் குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.
இரண்டு ஆசிரியர் பணியாற்றும் பள்ளியில் ஒரு ஆசிரியரை பயிற்சிக்கு அழைப்பதன் மூலம் ஒரு ஆசிரியரே 5 வகுப்புகளுக்கும் தேர்வு நடத்த வேண்டிய நிலை உள்ளது. பொது விடுமுறை நாட்களிலும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.இது குறித்து அனைவருக்கும் கல்வி இயக்க நாமக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் கூறுகையில், ‘‘தேர்வு பணி பாதிக்கும் வகையில் எந்த ஆசிரியரையும் பயிற்சிக்கு அழைக்கவில்லை. ஒரு ஒன்றியத்தில் 2 ஆசிரியர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. பல பள்ளிகளில் ஏபிஎல் அட்டைகளை ஆசிரியர்கள் மறந்து விட்டனர். தற்போது அது எளிமையாக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான பயிற்சி, ஆசிரியர் பயிற்றுனர் மற்றும் சிறந்த ஆசிரியர்களை கொண்டு அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், அவர்கள் பணியாற்றும் பள்ளிகளில் ஏபிஎல் அட்டையை பயன்படுத்தி எப்படி குழந்தைகளுக்கு பாடம் நடத்தியுள்ளனர் என காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்த பிறகு ஆய்வு செய்யப்படும்,’’ என்றார்

No comments:
Post a Comment