scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

September 28, 2013

தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை: "SLOW LEARNERS" பட்டியலிட உத்தரவு.

ஈரோடு மாவட்டத்தில்உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும், கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களை பட்டியலிட, சி.இ.ஓ., அய்யண்ணன் உத்தரவிட்டுள்ளார்.ஈரோடு மாவட்டத்தில் சி.இ.ஓ.,வாக பொன்குமார் இருந்த போது, எஸ்.எஸ். எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில்
மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த, அம்மாணவ, மாணவிகளின் திறனை அறிந்து,அவர்களுக்கு தனித்தனி வகுப்புகள் நடத்தப்பட்டது. சிறப்பு ஆசிரியர்கள், சிறப்பு வகுப்புகள், கூடுதல் வகுப்புகள், அலகு தேர்வுகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ச்சி சதவீதம் உயர்த்தப்பட்டது.மாணவர்களுக்கு பள்ளியிலேயே காலை உணவு கூட வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், பொதுத்தேர்வில், ஈரோடு மாவட்டம் மாநில அளவில் வெற்றியை பெற்றது. அடுத்து வந்த சி.இ.ஓ., வை.குமார், இப்பணிகளுடன், மாதிரி வினாத்தாள் தயாரித்து வழங்குதல், தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் என நடத்தி, அதே இடத்தை தக்க வைத்தார்.இவரை தொடர்ந்து சி.இ.ஓ.,வாக இருந்த ஸ்ரீதேவி முயற்சியால், எஸ்.எஸ். எல்.ஸி., பொதுத்தேர்வில், 13 பேர் மாநில அளவில் தேர்ச்சி பெற்றனர். ஆனால், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ப்ளஸ் 2 தேர்வில் அவர் ஆர்வம் காட்டாமல், கோட்டைவிட்டார்.கடந்த ஆக., 19ல், சி.இ.ஓ.,வாக, அய்யண்ணன் பொறுப்பேற்றார். நடப்பு கல்வியாண்டில், உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வி பயிலும்மாணவ, மாணவியர்கள் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை சி.இ.ஓ., செய்து வருகிறார்.பல பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்களை "ஏ, பி" போன்ற பிரிவிலும், சுமார் ரகம், மிகவும் குறைவாக படிப்போரை "சி, டி" என்ற வரிசையிலான வகுப்பிலும் படிக்க வைப்பதாகவும், சில பள்ளிகள்சுமாரான மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கம் செய்வது போன்ற பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதுபற்றி ஈரோடு சி.இ.ஓ., அய்யண்ணன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து, மேல்நிலைகல்வி பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்து மதிப்பீடு செய்தோம். கற்றல் திறன் குறைவாக (ஸ்லோ லேனர்ஸ்) உள்ள மாணவர்களை பட்டியலிட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த பட்டியலை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர், நாட்குறிப்பில் குறிப்பிட்டு, அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி, சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் ப்ளஸ் 2 வகுப்பில் படிக்கும் அனைத்து திறன் கொண்ட மாணவர்களுக்கும் அவரவர் திறனுக்கு ஏற்ப, கூடுதல் கவனம் செலுத்தியும், சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்தும், கூடுதல் தேர்வுகள் நடத்தியும் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.நடந்து முடிந்துள்ள காலாண்டு தேர்வு முடிவின்படி, இப்பட்டியல் தயாரித்து, ஒவ்வொரு மாதமும் அவர்களது முன்னேற்றம் குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படும். பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி மற்றும் மாநில அளவிலான தேர்ச்சிக்கு வழி செய்யப்படும், என்றார்.

No comments:

Post a Comment