பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு
சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் (தத்கல்) நாளை(செப்.17) மாலை வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் துறை
அறிவித்துள்ளது.பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்
விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்காக
இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. இவர்கள் அரசுத்
தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற
இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள்
தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.தனித்தேர்வர்கள் ஆன்-லைனில்
முழுமையான விவரங்களைப் பதிவு செய்த பிறகு புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தையும்,
தேர்வுக் கட்டணத்தை பணமாகச் செலுத்த வேண்டிய
ரசீதையும் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
வழக்கமான தேர்வுக் கட்டணம் ரூ.125,
சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.500 ஆகியவைச் சேர்த்து மொத்தம் ரூ.625-ஐ கட்டணமாகச் செலுத்த வேண்டும். செலுத்த வேண்டிய தொகை பதிவுச்
சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். கட்டணத்தை பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
ஆன்-லைனிலிருந்து புகைப்படத்துடன்
பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம், தேர்வுக்
கட்டணத் தொகை, பதிவுச் சீட்டு மற்றும் உரிய
இணைப்புகளுடன் தனித்தேர்வர்கள் புதன்கிழமை (செப்.18) மாலைக்குள் சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர்
அலுவலகங்களில் நேரில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.ஆன்-லைனில் பதிவிறக்கம்
செய்யப்பட்ட புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தில் தனித்தேர்வரின் அதேமாதிரியான
புகைப்படத்தை ஒட்ட வேண்டும். இந்தத் தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச்
சீட்டுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இவற்றை பதிவிறக்கம் செய்ய
வேண்டிய நாள்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
இந்த சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ்
விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களுக்கும் திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர், சென்னை ஆகிய இடங்களில் மட்டுமே தேர்வு
மையங்கள் அமைக்கப்படும்.தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு மதிப்பெண் சான்றிதழ்
அனுப்பும் பொருட்டு விண்ணப்பத்துடன் ரூ.40-க்கான அஞ்சல்
வில்லை ஒட்டப்பட்ட சுயவிலாசமிட்ட உறையை இணைக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் துறை
அறிவித்துள்ளது.
.
வழக்கமான தேர்வுக் கட்டணம் ரூ.125,
சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.500 ஆகியவைச் சேர்த்து மொத்தம் ரூ.625-ஐ கட்டணமாகச் செலுத்த வேண்டும். செலுத்த வேண்டிய தொகை பதிவுச்
சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். கட்டணத்தை பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
ஆன்-லைனிலிருந்து புகைப்படத்துடன்
பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம், தேர்வுக்
கட்டணத் தொகை, பதிவுச் சீட்டு மற்றும் உரிய
இணைப்புகளுடன் தனித்தேர்வர்கள் புதன்கிழமை (செப்.18) மாலைக்குள் சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர்
அலுவலகங்களில் நேரில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.ஆன்-லைனில் பதிவிறக்கம்
செய்யப்பட்ட புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தில் தனித்தேர்வரின் அதேமாதிரியான
புகைப்படத்தை ஒட்ட வேண்டும். இந்தத் தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச்
சீட்டுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இவற்றை பதிவிறக்கம் செய்ய
வேண்டிய நாள்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
இந்த சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களுக்கும் திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர், சென்னை ஆகிய இடங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு மதிப்பெண் சான்றிதழ் அனுப்பும் பொருட்டு விண்ணப்பத்துடன் ரூ.40-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட சுயவிலாசமிட்ட உறையை இணைக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment