scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

September 17, 2013

நைட்டியோடு பள்ளிக்கு வரும் பெண்களே..

பல நாடுகளில் பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி இந்த ஆடையைத் தான் போட வேண்டும், இந்த ஆடைகளைப் போடக் கூடாது என்று சட்ட திட்டங்கள் உள்ளன.
ஆனால், இந்தியாவில் சில புகழ்பெற்ற கோயில்களைத் தவிர மற்ற ஏனைய இடங்களில் ஆடைகளுக்கு என்று பிரத்யேக சட்ட திட்டங்கள் எதுவும் இல்லை. இது மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய சுதந்திரமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், அவ்வாறு நமக்குக் கிடைத்துள்ள சுதந்திரத்தை பல வகையிலும் நாம் சரியாக பயன்படுத்துவதில்லை. தற்போது பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளிக்கு பிள்ளைகளை விடுவதற்காக வரும் பெற்றோருக்கு சில ஆடை கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, பள்ளிக்கு பிள்ளைகளை விடுவதற்காக வரும் தந்தை அரைக்கால் சட்டை எனப்படும் ஷாட்ஸ்களையும், லுங்கியையும் அணிந்து வரக் கூடாது என்றும், தாய்மார்கள் நைட்டி அணிந்து வரக் கூடாது என்றும் விதிமுறையை வகுக்க உள்ளது பள்ளிக் கல்வித் துறை.
பொதுவாக நைட்டி என்பது மேலை நாடுகளில் இரவில் உறங்கும் போது நிம்மதியாக எந்த அசௌகரியமும் இல்லாமல் இருக்க கண்டுபிடிக்கப்பட்ட ஆடையாகும். அதனை அவர்கள் இரவில் மட்டுமே பயன்படுத்துகின்றனர். அந்த நைட்டியை போட்டுக் கொண்டு அந்நாட்டுப் பெண்கள் கடைக்கோ, பள்ளிக்கோ செல்வதில்லை.
ஆனால், கலாச்சாரம், பண்பாடு என்று பேசிக் கொண்டிருக்கும் நம்ம ஊருக்கு அந்த நைட்டி வந்த போது, குடும்பங்களில் ஏராளமான எதிர்ப்புகள் எழுந்தன. பல குடும்பங்களில் நைட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. அதையும் மீறி தற்போதைய பெண்கள் நைட்டிக்கு அதீத வரவேற்பு அளித்து வருகின்றனர்.
அதில் ஒரு குறை என்னவென்றால், அந்த நைட்டியை கலாச்சார உடையாகவே மாற்றிவிட்டனர். வீட்டில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் பகல் நேரத்திலும் நைட்டியை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதில் என்ன தவறு என்று கேட்கலாம். தவறில்லை. ஆனால், அவசரத்துக்கு கடைக்கு செல்லும் போது நைட்டியோடு செல்வதும், பள்ளிக்கு பிள்ளைகளை அழைத்து வர நைட்டியோடு செல்வதும், இன்னும் சொல்லப் போனால்,  நைட்டியோடு இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் பெண்களையும் நாம் நிச்சயம் பார்த்திருப்போம். இதைத் தான் தவறு என்கிறோம்.
பொதுவாக தமிழகத்தில் பள்ளிகளுக்குள் நைட்டியோடு வரும் தாய்மார்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த கட்டுப்பாடு இருந்தும், பெரும்பாலான தாய்மார்கள் நைட்டியோடு தான் பள்ளிக்கு வருகிறார்கள். சில சமயங்களில் அவர்கள் ஆசிரியரை சந்தித்துப் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்து விடுகிறார்கள் பள்ளிக் காவலர்கள். அப்போது வாக்குவாதம் ஏற்படுவதையும் பார்க்க நேரிடுகிறது.
இந்த சூழ்நிலைகளைத் தவிர்க்கவே, பிள்ளைகளை பள்ளிக்கு விடுவதற்காக வரும் பெற்றோர் இதுபோன்ற ஆடைகளை அணிந்து வர விதிமுறை வகுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
நாம் சரியான பாதையில் நடக்கும் போது எங்கும் நமக்கு தடைகள் ஏற்படுவது இல்லை. நாம் பாதையை விட்டு விலகும் போதுதான் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புச் சுவரில் மோதிக் கொள்ள நேரிடுகிறது. பிள்ளைகளுக்கு படிப்பைக் கற்றுத் தரும் பள்ளியும் கோயில் போன்றதுதான். எனவே, தாய்மார்களே, நைட்டியை போட்டுக் கொண்டு பள்ளிக்கு வரும் பழக்கத்தை கைவிடுங்கள்.

No comments:

Post a Comment