பதவி
உயர்வுக்கு வழிவகுக்கும் துறைத் தேர்வுகளின் முடிவுகள் வெளியாவதில்
தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அரசுத் துறை ஊழியர்கள்,
அதிகாரிகளின் பதவி உயர்வு தாமதமாகி வருகிறது.
இந்த
ஆண்டு துறைத் தேர்வுகள் கடந்த மே மாதம் வழக்கம் போல் நடத்தப்பட்டன. இந்தத்
தேர்வுகளில் ஒரு சிலவற்றுக்கு மட்டும் கடந்த ஆகஸ்ட் 12-ல் முடிவுகள்
வெளியிடப்பட்டன. மீதமுள்ள தேர்வுகளுக்கு இதுவரை முடிவுகள் வெளியாகவில்லை.
பதவி
உயர்வுக்காகவும், பணி நிரந்தரத்துக்காவும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகள் துறைத் தேர்வினை எழுதுகின்றனர். இந்தத் தேர்வுக்கான
முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் பதவி உயர்வில் பெரும் பாதிப்பு
ஏற்படுவதாக அரசுத் துறை அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். துறைத்
தேர்வுக்கான முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment