1. மூலிகையின் பெயர் -: அரசு.
2. தாவரப் பெயர் -: FICUS RELIGIOSA.
4. பயன்தரும் பாகங்கள் -: கொழுந்து, பட்டை, வேர், பழம் மற்றும் விதை முதலியன.
5. வளரியல்பு
-: அரசு பெரிய மரவகையைச் சேர்ந்தது. இதன் தாயகம் இந்தியா, பங்களாதேஸ்,
நேபால், பாக்கீஸ்தான், சைனாவின் தென்மேற்குப்பகுதி, வியட்னாவின்
கிழக்குப்பகுதி மற்றும் இந்தோசைனா. இது சுமார் 90 அடிக்குமேல்
வளரக்கூடியது. இந்த மரத்தின் அடிபாகம் சுற்றளவு சுமார் 9 அடி வரை
பெருக்கும். இதன் ஆரம்ப ஆண்டு 288 பி.சி க்கு மேல் இருக்கும். இலைகள் நீழ்
வட்டமாகவும் கூர்நுனியாக இருக்கும். ஊர் ஏரிகள், குளக்கரைகள், ஆற்றோரங்கள்
ஆகிய இடங்களில் காணப்படும். இது ஜைனம், புத்த, இந்து மதங்கள் புனித
மரமாகக் கருதிகிறார்கள். புத்தர் ஞானம் அடைந்தது இந்த மரத்தடியில் தான்.
கணவம், போதிமரம் என்றும் சொல்வர்கள். இந்த மரத்தின் காற்று தூய்மையான
ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. அதனால் கல்பக விருட்ச்சமாகக் கருதப்படுகிறது.
இந்த மரத்தின் அடியில் தெய்வ சிலை வைத்து வழிபடுவதன் நோக்கம் அறியலாம்.
இதன் பூக்கள் சிறிதாகச் சிவப்பாக இருக்கும். பிப்ரவரிமாதங்களில் பூக்கும்.
மே, ஜூன் மாதங்களில் பழங்கள் விடும். பழங்கள் சிறிதாக இருக்கும்
பறவைகளுக்கு நல்ல உணவு. விதைகள் சிறிதாக அதிகமாகத் தென்படும். பறவைகள் இதன்
பழத்தைச் சாப்பிட்டு எச்சத்தை இடும் இடங்களில் செடிகள் உற்பத்தியாகும்
முக்கியமாக கட்டிடங்களின் இடுக்குகளில் செடிகள் பெருகும். தெய்வ
நம்பிகையுள்ளவர்கள் இந்த மரத்துடன் வேப்பமரத்தையும் சேர்த்து
வளர்ப்பார்கள். பல கிராமங்களில் இந்த அரச மரத்தைச் சுற்றி மேடையமைத்து
ஊரில் உள்ள வயதானவர்கள் அரட்டையடித்துப் பொழுது போக்குவதும் அங்குதான்.
உதாரணம் கெம்பனூர் போன்று. இந்த மரத்தினடியில் இருந்து காற்றை அனுபவித்தால்
இருதயநோய் வராது என்பது எந்த அளவுக்கு உண்மையென்று தெறியவில்லை. விதைகள்
மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.
6. மருத்துவப்பயன்கள்
-: அரச மரத்தின் இலைக் காற்று குளிர்ச்சியை உண்டாக்கி வெப்பத்தைப் போக்கி
கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது. ஆண்மை பெண்மையாக் காப்பாற்றும்.
வேர்பட்டை, மரப்பட்டை கிருமிகைளை அழித்து புண்ணாற்றும், பழவிதை குடல்
புண்ணாற்றும், மலச்சிக்கலைப் போக்கும், தாது பெருக்கி விந்தினைக் கட்டும்.
பழம் ஆஸ்த்துமாவைக் கட்டுப்படுத்தும், வேர் அல்சரைக் குணப்படுத்தும்,
தோல்வியாதிகளைக் குணப்படுத்தும், இருதயத்தைக் குணமாக்கும்.
அரச
மரத்துக் கொழுந்து இலையைக் கைப்பிடி எடுத்து அரைத்து, நெல்லிக்காயளவு
எருமைத் தயிருடன் சேர்த்து அதிகாலையில் சாப்பிட்டு வர, தொண்டை வறட்சி,
தாகம் நீங்கும். குரல் வளத்தைத் தரும். சீதபேதியைக் கட்டுப்படுத்தும்.
“அரசம் வேர் மேல் விரணமாற்றும். அவ்வித்து
வெருவரும் சுக்கில நோய் வீரட்டும்-குரல்வளை
தாகம் ஒழிக்கும், கொழுந்து தாது தரும். வெப்பகற்றும்,
வேக முத்தோடம் போக்குமென்” ---- கும்பமுனி.
அரச
மர வேரின் பொடி தொண்டைப் புண்ணை ஆற்றும். விதை சுக்கில குறைபாட்டை நீக்கி
மலட்டை அகற்றி கருத்தரிக்க வைக்கும், கொழுந்து கசாயம் தொண்டைப் புண்ணை
ஆற்றும், தாகம் தணிக்கும். கொழுந்து அரைத்துச் சாப்பிட நீர்த்துப் போன
விந்து கெட்டியாகும், தாது ஊறும், உடல் வெப்பம் தணியும். வாத, பித்த,
சிலேத்தும நோய்களைப் போக்கும்.
அரச தளிரை அரைத்துப் பூசினால் கால்வெடிப்பு குணமாகும். இதன் பாலைத் தடவினாலும் குணமாகும்.
அரசு
மரப்பட்டையை உலர்த்தி எரித்த சாம்பலை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர
சொறி, சிரங்கு குணமாகும், பிற புண் ஆறும். இப்பொடியை சாம்பிராணியுடன்
சேர்த்துப் புகைத்தால் தீங்கு செய்யும் நுண்ணுயிர்க் கிருமிகள் வீட்டில்
தங்கா.
வேர்
பட்டை 30 கிராம் 300 மி.லி. நீரில் போட்டு 100 மி.லி. யாகக் காய்ச்சி பால்
சர்கரை சேர்த்துப் பருகி வர வெட்டைச் சூடு, தினவு, நீர் எரிச்சல் ஆகியவை
தீரும்.
அரசு
பட்டைத் தூள் 2 சிட்டிகை வெந்தீரில் கொதிக்க வைத்து ஆற விட்டு வடித்துக்
கொடுக்க விக்கல், தொண்டைக் கட்டு, குரல்வளை நோய் தீரும்.
அரச
மரத்திலிருந்து விழுந்த பழத்தை எடுத்து சுத்தப்படுத்தி நன்கு காயவைத்துப்
பொடியாகச் செய்து சூரணமாக வைத்துக் கொள்ள வேண்டும். 5-10 கிராம் இப்பொடியை
நாளும் காலை மாலை பாலில் கலந்து சர்கரையும் சேர்த்து காப்பி போல 48-96 நாள்
சாப்பிட வேண்டும். ஆண் விந்து கட்டும், ஊறும். ஆண்மை பெருகும். ஆண் மலடு
நீங்கும்.
அரசங் கொழுந்தை குடிநீராக்கிக் குடிக்க சுரம், தாகம் ஆகியவை தீரும்.
உலர்ந்த பழத்தை இடித்துப் பொடி செய்து 5 கிராம் வெந்நீரில் காலை, மாலை 20 நாள்கள் கொடுக்க சுவாசக் காசம் தீரும்.
அரசு
இலைக் கொழுந்து ஒரு பிடி எடுத்து மண் சட்டியில் போட்டு அரை லிட்டர் நீர்
விட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி காசாயமிட்டுச் சாப்பிடலாம். இலைக்
கொழுந்தை அரைத்து நெல்லியளவு பாலில் கலந்து சாப்பிடலாம். 48 நாள் சாப்பிட
பெண்மலடு நீங்கி கருத்தரிக்கும். புளி உணவைக் குறைக்க வேண்டும்.
No comments:
Post a Comment